மாரி செல்வராஜ் எச்சரித்துள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும் – மாமன்னன் ட்ரெண்ட் குறித்து வன்னி அரசு

0
1945
Vanniyarasu
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் மாமன்னன். இந்த படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இவர்களை தொடர்ந்து வைகை புயல் வடிவேலு , பகத் பாசில், லால் போன்ற பல முன்னணி நடிகர்களும் இந்த படத்தில் நடித்து இருந்தனர்.

-விளம்பரம்-

இந்த படத்திற்கு ஏ. ஆ.ர் ரகுமான் இசை அமைத்திருந்தார். படத்தில் எல்லோரும் தனக்கு கீழ் தான் அடங்கி நடக்க வேண்டும் என்று நினைக்கும் ஆதி வர்க்கத்தினருக்கும், சமுதாயத்தில் முன்னேறி வாழ வேண்டும் என்று அனைவரையும் சமமாக பார்க்கும் பட்டியலின மக்களுக்கும், இடையே நடக்கும் போராட்டம் தான் மாமன்னன் திரைப்படம். இதனைத்தொடர்ந்து இந்த படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளத்தையும், அரசியலையும் ஆதிக்க வர்க்கத்தினர் எப்படி பயன்படுத்தி கொள்வார்கள் என்பதை இயக்குனர் கூறிஇருந்தார்.

- Advertisement -

மேலும், இந்த படத்தினை பார்த்து முதல்வர் மு. க. ஸ்டாலின், கமலஹாசன், தனுஷ் உட்பட பல பிரபலங்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்று இருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் இந்த படம் Netflix தளத்தில் வெளியாகி இருந்தது. பொதுவாக ஒருபடம் திரையரங்கில் வெளியான போது வரும் விமர்சனங்களை விட அதே படம் Ottயில் வெளியாகும் போது தான் சமூக வலைதளத்தில் அதிகம் பேசப்படும்.

அந்த வகையில் இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியான போது சமூக வலைத்தளத்தில் பேசப்பட்டதை விட தற்போது தான் சமூக வலைதளத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக இந்த படத்தில் வில்லனாக நடித்த பகத் பாஸிலின் கதாபாத்திரத்தை ஹீரோ போல மாற்றி பல்வேறு நடிகர்களின் பாடல்களை எடிட் செய்து ஒரு சிலர் கொண்டாடி வருகின்றனர். மேலும், அவரது நடிப்பை பாராட்டுவது விட அவர் எங்களது சமூகம் என்று பலர் உரிமைகொண்டடி வருகின்றனர்.

-விளம்பரம்-

இதுதொடர்பான பல விதமான மீம்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ள வன்னியரசு ‘ திரைப்படம் வெளிவந்ததிலிருந்து சாதியவாதிகளுக்கு பதற்றம் பீறிட்டு,என்ன செய்வது என தெரியாமல் பிதற்றி வருகிறார்கள். வெளிவந்த நாளில் தென்மாவட்டங்களில் தியேட்டர்களை முற்றுகையிட்டன சாதியவாதிகள். அப்புறம் தான் கதைக்களமே தென்மாவட்டம் இல்லை என தெரிந்து தலையை சொறிந்து கொண்டனர்.இப்போது ரத்னவேல் கதாபாத்திரத்தை சாதியவாதிகள் கொண்டாடி வருகின்றனர்.

அதாவது, நாயை படுகொலை செய்வதை கொண்டாடுவது, சொந்த சாதிக்காரனையே படுகொலை செய்வதை கொண்டாடுவது என சாதிய மனநோயாளிகளாக மாறுகின்றனர். அதுவும் அவரவர் சாதிகளை இணைத்து சாதிப்பெருமையோடு பதிவிட்டு வருகின்றனர். இதில் சாதியவாதிகளுக்கு மகிழ்ச்சி என்பது தற்காலிகம் தான். ஏனெனில், சாதியவாதியான ரத்னவேலுக்கு ஏற்படும் சோக முடிவை யாரும் மறந்திருக்க முடியாது. சாதியவாதிகளுக்கு நாளை இந்த முடிவுதான் ஏற்படும் என்பதை இயக்குனர் மாரி செல்வராஜ் எச்சரித்துள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும் ‘ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement