தமிழ் சினிமாவில் பிரபல நடிகரும், அரசியல்வாதியுமான சரத்குமாரின் மகள் தான் நடிகை வரலட்சுமி சரத்குமார். தமிழில் சிம்பு நடித்த ‘போடா போடி’ படத்தின் மூலம் தான் வரலக்ஷ்மி சினிமா உலகில் அறிமுகமானார். பின்னர் இவர் தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, சர்க்கார், சண்டக்கோழி 2, மாரி 2 போன்ற பல்வேறு படத்தில் நடித்துள்ளார். மேலும், பல ஆண்டுகளாக நடிகர் விஷாலும், வரலட்சுமியும் காதலித்து வந்தார்கள் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டது. பின் சில காரணங்களால் இவர்கள் காதல் பிரேக் அப் ஆனது. பின் நடிகர் விஷாலுக்கும் வேற ஒரு பெண் உடன் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது.
இந்த நிலையில் தற்போது வரலட்சுமிக்கும் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வரலட்சுமிக்கு பார்த்து உள்ள மாப்பிளை கிரிக்கெட் உடன் சம்பந்தப்பட்டவர் என்று கூறப்படுகிறது. அவர் இந்திய கிரிக்கெட் அணியில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார் என்றும் செய்திகள் வெளியானது.
அதோடு கோலி,தோணி என இந்திய அணியின் பல வீரர்கள் உடன் மிகவும் நெருக்கமானவராக உள்ளாராம். அதுமட்டும் இல்லாமல் இவரின் குடும்பத்துக்கும் வரலட்சுமி குடும்பத்துக்கும் பல ஆண்டுகளாக பழக்கம் இருப்பதாககூறப்பட்டது. பல ஆண்டுகளாக நட்பாக இருந்த இவர்கள் உறவு காதலாக மலர்ந்தது. தற்போது திருமணம் வரை வந்திருக்கிறதுஎன்று செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் தனது திருமணம் குறித்து வெளியான செய்திக்கு வரலக்ஷ்மி சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார். அதில்’ நான் திருமணம் செய்துகொள்கிறேன் என்று நான் எப்போதும் எனக்கு கடைசியாக தெரிகிறது?? ஹஹாஹா, அதே முட்டாள்தனமான வதந்திகள். எல்லோரும் நான் திருமணம் செய்து கொள்வதில் வெறித்தனமாக இருக்கிறார்கள்.நான் திருமணம் செய்துகொண்டால் கூரை ஏறி கூச்சலிடுவேன். எனக்கு திருமண ஆகபோவது இல்லை. நான் நடிப்பதை நிறுத்தவில்லை’ என்று பதிவிட்டுள்ளார் வரலக்ஷ்மி.