விஜயை நாங்கள் கிண்டல் செய்வோம்..!அவரது இன்னொரு பெயர் இதுதான் பிரபல நடிகை ஓபன் டால்க் ..!

0
361

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் நடிகர் விஜய். தற்போது இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் “சர்கார்” படத்தில் நடித்து வருகிறார். மேலும், இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரும் நடித்துள்ளனர்.

Varalakshmi

சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் வெளியாகி யூடியூபில் ட்ரெண்ட் ஆனதுதான் பல்வேறு சாதனைகளை புரிந்தது வருகிறது. இந்த படத்தில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் நடிகர் ராதாரவியின் மகளாக நடித்துள்ளார். மேலும், நடிகை வரலக்ஷ்மி இந்த படத்தில் ஒரு அரசியல்வாதியாக நடித்துள்ளார் என்று டீசரில் இருந்து தெளிவாக தெரிந்தது.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை வரலக்ஷ்மி விஜய் குறித்தும் “சர்கார்” படத்தின் படபிடிப்பின் போது நடைபெற்ற சில சுவாரசியமான தகவலையும் பகிர்ந்துள்ளார். அந்த பேட்டியில் பேசியுள்ள அவர், நடிகர் விஜய் மிகவும் நல்ல மனிதர். எப்போதும் செட்டில் அமைதியாக தான் இருப்பார்.

அமைதிக்கு மறுபெயர் என்றால் அது அவர் தான். ஆனால், நான் அப்படி இல்லை அவருக்கு அப்படியே எதிர்மறையான கேரக்ட்டர். அதே போல முருகதாஸ் சாரும் கொஞ்சம் ஜாலியான கேரக்ட்டர்.முருகதாஸ் சாரும் நானும் சேர்ந்து விஜய் சாரை கலாய்த்துக்கொண்டே தான் இருப்போம்.மேலும், சர்க்கார் என்னுடைய கதாபாத்திர வேறு யாரும் திறமையாக நடித்திருக்க முடியாது என கூறி பாராட்டினார்.