இனி சினிமாவிற்கு மீண்டும் நடிக்க வரமாட்டேன்..!தனுஷ் பட நாயகி வேதனை ..!

0
657
- Advertisement -

சினிமா துறை பொறுத்த வரை ஹீரோக்களுக்கு மட்டுமே எவர்க்ரீன் என்ற அந்தஸ்த்து இருக்கிறது.ஆனால், கதாநாயகிகளை பொறுத்த வரை ஒரு சிலர் மட்டுமே வருடங்களை தாண்டி கதாநாயகிகளாக இருக்க முடிகிறது. ஆனால், முன்னணி நடிகர்களுடன் நடித்த சில கதாநாயகிகள் பின்னர் திரை துறையில் இருந்து காணாமல் போய் விடுகின்றனர்.

-விளம்பரம்-

Richa Gangopadhyay

- Advertisement -

அந்த வரிசையில் தமிழில் “ஒஸ்தி ” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரிச்சா கங்கோபத்யாய். ஒஸ்தி படத்திற்கு பின்னர் தனுஷுடன் “மயக்கம் என்ன” படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார்.அந்த படத்திற்காக சிறந்த நடிகை என்ற பிலிம் ஃபேர் விருதினையும் வென்றார்.

தமிழ் திரையுலகிற்கு வருவதற்கு முன்பாகவே தெலுங்கில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான “லீடர்” என்ற படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். அதன் பின்னர் பல்வேறு தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். ஆனால், கடந்த 2013 ஆம் ஆண்டிற்கு பின்னர் எந்த படத்திலும் நடிக்கவில்லை.

-விளம்பரம்-

இந்நிலையில் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் சினிமாவில் தான் மீண்டும் வருவதற்கான வாய்ப்பு பற்றி தெரிவித்த நடிகை ரிச்சா, என்னிடம் பலரும் ‘உங்களின் அடுத்த படம் எது?’ என்று அடிக்கடி கேட்டு வருகின்றனர். இந்த கேள்வி எனக்கு 90 வயது ஆனாலும் தொடரும் . ஆனால், உண்மை என்னவெனில் நான் மீண்டும் நடிக்க வரவேய மாட்டேன். சினிமா என்பது கொஞ்ச நாட்கள் மட்டுமே அதில் நான் மீண்டும் வருவதற்கான வாய்ப்பு இனி எனக்கு இல்லை என்று வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

Advertisement