இதை நீங்கள் இரண்டே செயலில் நிறுத்தலாம் – விஜய், அஜித்துக்கு கோரிக்கை வைத்த இளையராஜா குடும்பத்தை சேர்ந்த பிரபலம்.

0
245
vijayajith
- Advertisement -

வழக்கம்போல சோசியல் மீடியாவில் மீண்டும் விஜய்-அஜித் ரசிகர்களின் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. தற்போது இது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையையும், கலவரத்தையும் ஏற்படுத்திஇருக்கும் நிலையில் இதுகுறித்து தன் வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால். பொதுவாகவே சோசியல் மீடியாவில் நடிகர், நடிகைகளுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதும், பேசுவதும் அவர்களை எதிர்ப்பவர்களை திட்டுவதும் தான் ரசிகர்களின் காலம் காலமாக செய்து வரும் ஒரு வழக்கமான விஷயமாக இருந்து வருகிறது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is image-144.png

அதிலும் காலத்திற்கு ஏற்ப சமூக வலைத் தளங்களின் எண்ணிக்கை கூடுவது போல விஜய் –அஜித் நடிகர்களின் ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் மற்றும் அஜித் முன்னணி நட்சத்திரங்களாக திகழ்ந்து வருகின்றனர். இவர்கள் இருவருக்குமே சரிக்கு சமமான மாபெரும் ரசிகர் பட்டாளம் இருப்பது அனைவரும் மாபெரும் ஒன்றே. இவர்களுக்கு என்று ரசிகர் கூட்டம் தொடங்கியதில் இருந்தே ரசிகர்களுக்கு இடையே நீயா நானா? போட்டி தொடங்கியது.

இதையும் பாருங்க : அனிதாவை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய ரம்யா பாண்டியன், என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்களே- வைரலாகும் வீடியோ

- Advertisement -

விஜய் vs அஜித் ரசிகர்கள் :

சமீப காலமாக இரு ரசிகர்களும் ஒற்றுமையாக இருந்து வந்தாலும் ஒரு சில ரசிகர்கள் இன்னும் தலயா , தளபதியா என்ற சண்டையை விடுவதாக இல்லை. இதனால் சோசியல் மீடியாவில் அடிக்கடி இரு ரசிகர்களும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் மீண்டும் விஜய் –அஜித் ரசிகர்கள் கோதாவில் இறங்கி உள்ளார்கள். சமீபத்தில் அஜித்தின் வலிமை படம் வெளியாகி வசூல் சாதனை புரிந்து வருகிறது.

ட்ரெண்ட்டான மோசமான ஹேஷ் டேக் :

என்னதான் இந்த படம் வெற்றிப்படம் என்று கூறினாலும், இந்த படத்தின் வெற்றியை விஜய் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனாலேயே வலிமை படம் வெளியானதில் இருந்தே ட்விட்டரில் அடிக்கடி சண்டை போட்டு தான் வருகின்றனர். அதிலும் இருநடிகர்களின் ரசிகர்களும் ட்விட்டரில் மோசமான ஹேஷ் டேக்கை ட்ரெண்டு செய்துவிடுவார்கள். அந்த வகையில் சமீபத்தில் “RIP Joseph Vijay”, “Aids Patient Ajith” என்ற இரண்டு ஹேஷ் டேக் சமீபத்தில் ட்ரெண்ட் ஆனது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-569.jpg

விஷ்ணு விஷால் அறிவுரை :

இந்த ஹேஷ் டேக்குகளை போட்டு இரு நடிகர்களின் ரசிகர்களும் மாறி மாறி விஜய் மற்றும் அஜித்தை விமர்சித்தும், கேலி செய்தும், அசிங்கப்படுத்தியும் வருகின்றார்கள். இப்படி ஒரு நிலையில் ரசிகர்களின் இந்த கேவலான செயலுக்கு ஏற்கனவே நடிகர் விஷ்ணு விஷால் அறிவுரை கூறி இருந்தார். அதில், இப்படி ஒரு கேலிக்கூத்தை நம்மை நாமே செய்து கொண்டிருக்கிறோம்.ட்விட்டர் ஹேஷ்டேக்குகள் மற்றும் கலவரமம் மிகவும் மனச்சோர்வை ஏற்படுத்துகின்றன.அன்பும், அமைதியும் மட்டுமே குணமாகும், வெறுப்பு அல்ல’ என்று கூறி இருந்தார்.

வாசுகி பாஸ்கர் வேண்டுகோள் :

தற்போது பிரபல பேஷன் டிசைனரும் இளையராஜா குடும்பத்தை சேர்ந்தவருமான வாசுகி பாஸ்கர் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில், அன்பின் பெயரால் வாந்தி எடுக்கும் இந்த சமூகப் போரை முடிவுக்கு கொண்டு வரும்படி இரண்டே முயற்சியில் ஒரு எழுத்துப்பூர்வமான அறிக்கையை வெளியிட்டுமாறு விஜய் மற்றும் அஜீத் இருவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் பெயர் படங்களை தவறாகப் பயன்படுத்தி நேரத்தை வீணடித்து கலாச்சாரத்தைகெடுகின்றனர். இதை நிறுத்து வேண்டும், இல்லையேல் அடுத்த தலைமுறை சமூக விரோதிகளாக மாறுவதை அனுமதிக்கிறோம்.


Advertisement