சிங்கத்திடம் விளையாடும் வேதிகா..! வைரல் வீடியோ!

0
419
Vedhika

அக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘மதராஸி’ படத்தில் காதநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வேதிகா அதன் பின்னர் முனி, காளை, சக்கரகட்டி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

Vedhika

தமிழில் பரவலான படங்களில் நடித்து வந்த நடிகை வேதிகா இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான ‘பரதேசி ‘படத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அந்த படத்திற்கு பின்னர் நிறைய பட வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்த இவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் மலையாளம், கன்னடம், தெலுகு என்று பல மொழி சினிமா துறைகளில் கிடைக்கும் வாய்ப்பை எல்லாம் பயன்படுத்தி படத்தில் நடித்து வருகிறார் நடிகை வேதிகா.

தற்போது இந்தியில் ஒரு படம் , தமிழில் ஒரு படம் என்று விரைவில் கமிட் ஆக இருப்பதால் தற்போதுள்ள ஓய்வு நேரத்தை மொரிஸியஸில் கழித்து வருகிறார். அங்குள்ள சுற்றுலா தங்களுக்கு சென்று திரில்லானா சாகசங்களை செய்து மகிழ்ந்து வருகிறார். முன்னதாக லா வேளி நேசர் பார்க்கில் உள்ள 350 மீட்டர் கயிற்று பாலத்தில் நடந்து மகிழ்ச்சி அடைந்த அவருக்கு உற்சாகம் பத்தவில்லை.

அதன் பின்னர் மோரிஷி யஸ் மிருக காட்சி சாலைக்கு சென்று அங்குள்ள சிங்கத்துடன் மிக அருகில் அமர்ந்து வீடியோ எடுத்துக்க கொண்டார். அந்த வீடியோவில் அவருடைய அளவிற்க்கு இணையாக இருக்கும் சிங்கத்துடன் அருகில் அமர்ந்து அதனை தடவி கொடுத்து மிகவும் தைரியமாக அதுனுடன் பழகியுள்ளார் நடிகை வேதிகா. சமீபத்தில் அந்த வீடியோ பதிவை தனது சமூக வலைதளத்திலும் பதிவிட்டுள்ளார்.தற்போது அந்த வீடியோ மிகவும் வைரலாக பரவி வருகிறது.