எங்க அப்பா என்ன சைக்கோவா? எவ்ளோ கடவுள் தன்மையான மனுஷன் – வீரப்பன் பட டீசரை கண்டு அவரது மகள் ஆவேசம்.

0
2280
Veerappan
- Advertisement -

என் அப்பா என்ன சைக்கோவா? ஆவணப்பட டிசரை பார்த்து கொந்தளித்து வீரப்பனின் மகள் வித்யா அளித்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சந்தன கடத்தல் வீரப்பனை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டர்கள். சந்தனமரம் மற்றும் யானைகளை கொன்று அதன் தந்தங்களை கடத்தல் போன்ற சம்பவங்களை பல வருடங்களாக வீரப்பன் செய்து வந்தார். பிறகு, தன் குற்றங்களில் குறுக்கிடுபவர்களையும் கொல்ல ஆரம்பித்தார். பதினேழு வயதில் தனது முதல் கொலையை செய்தார் வீரப்பன். அதன் பின் போலீஸ்காரர்கள், வனத்துறை மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் என்று 184 பேரை கொன்றதற்காகவும், சட்ட விரோதமாக 200க்கும் அதிகமான யானைகளை கொன்றதற்காகவும் தேடப்பட்டு வந்தார்.

-விளம்பரம்-

மேலும், 130 கோடி மதிப்பிலான சந்தன மரங்களை கடத்தி இருந்தார். பல வருடங்களாக வீரப்பன் தமிழக, கர்நாடக, கேரளா அரசுகளுக்கு பெரும் சவாலாக விளங்கினார். ஒரு கட்டத்தில் சிலநூறு பேர் கொண்ட படையே தனக்கென வைத்திருந்தார் வீரப்பன். 130 கோடி மதிப்பிலான சந்தன மரங்களை கடத்தியதற்காக தேடி வந்த வீரப்பன் 2004 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் விஜயகுமார் தலைமையிலான தமிழ்நாடு சிறப்புக் காவல்படையினரால் கொல்லப்பட்டார்.

- Advertisement -

தி ஹண்ட் ஃபார் வீரப்பன்:

இவருடைய இறப்பு தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. மேலும், எப்போதுமே சமூக வலைத்தளங்களில் வீரப்பனை குறித்து ஏதாவது ஒரு செய்தி வந்து கொண்டு தான் இருக்கிறது. அவருடைய வாழ்க்கை தொடங்கி இறந்தவரை பல மர்மங்கள் மறைந்திருக்கிறது. வீரப்பன் மறைந்து 19 ஆண்டுகள் இருந்தாலும் அவரை குறித்து படங்கள், சீரியல்களில், வெப் சீரிஸ் என்று ஏதாவது ஒரு இடங்களில் பேசப்பட்டு தான் இருக்கிறது. அந்த வகையில் வீரப்பன் தேடுதல் வேட்டையை மையப்படுத்தி உருவாகி இருக்கும் படம் ‘தி ஹண்ட் ஃபார் வீரப்பன்’ .

வித்யா அளித்த பேட்டி:

இது ஒரு ஆவண ப்படம். வீரப்பனை குறித்த பலரும் அறிந்திடாத சில விஷயங்களை இந்த படத்தில் காண்பித்து இருக்கிறார்கள். இந்த ஆவணப்படம் நெட்ப்லிக்ஸில் ஆகஸ்ட் 4ஆம் தேதி வெளியாகிறது. இது குறித்து பல சர்ச்சைகளும் எதிர்ப்புகளும் சோசியல் மீடியாவில் தொடங்கிவிட்டது. இந்த நிலையில் பாஜக வின் ஓபிசி பிரிவின் மாநில துணைத் தலைவராக இருக்கும் வீரப்பனின் மகள் வித்யா பேட்டி அளித்து இருக்கிறார். அதில் அவர், மேக்கிங் கை பார்க்கும்போது தரமாக எடுத்து இருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஆனால், டீசரில் அப்பாவை பற்றி குறிப்பிட்டிருக்கும் வசனங்கள் தான் கொஞ்சம் சங்கடத்தை கொடுத்திருக்கிறது.

-விளம்பரம்-

படம் குறித்து சொன்னது:

அப்பாவை ராபின் ஹூட் என்று டீசரில் சொல்கிறார்கள். அதோடு கடத்தல்காரன் என்று சேர்த்து சொல்கிறார்கள். அப்பா தன்னை சுற்றி இருந்த எல்லோருக்குமே கடவுளாகத்தான் இருந்தார். எங்க அப்பா சுயநலமாக இருந்திருந்தால் எங்களுக்கு என்று சொத்து சேர்த்து வைத்து விட்டு போயிருப்பார். இந்த ஆவண படத்தை பார்த்து அப்பாவை பற்றி மக்கள் எப்படி வேண்டுமானாலும் கற்பனை செய்து கொள்ளலாம். தூரமாக இருப்பவர்களுக்கு அப்பாவை பற்றி தவறாகத்தான் தெரியும். ஒவ்வொரு முறையும் அப்பாவை குறித்து பேசும்போதும் படமாக்கப்படும் போதும் இந்த உலகில் அப்பாவை மிஞ்சிய வீரன் யாருமில்லை என்ற எண்ணம் வருகிறது.

தந்தை குறித்து பேசியது:

மேலும், இரண்டு மாநில மக்களை பிணைய கைதிகளாக வைத்து அப்பா பணம் வாங்கினார் என்று டீசரில் காட்டியிருக்கிறார்கள். மனித உருவில் இருக்கும் காட்டு விலங்கு என்று சொல்கிறார்கள். காட்டில் அட்டாக் பண்ணும் விலங்குகளோடு ஒப்பிடுகிறார்கள். எங்க அப்பா என்ன சைக்கோவா? எவ்ளோ கடவுள் தன்மையான மனுஷன்? அப்ப மக்களோட கஷ்டங்களை புரிந்து வாழ்ந்த மனுஷன் விலங்குகளோடு ஒப்பிடுவது சரியா? இது எனக்கு ரொம்ப வருத்தத்தை தருகிறது என்று ரொம்ப எமோஷனலாக தன்னுடைய தந்தை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார் வித்யா.

Advertisement