தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக வளம் வந்தவர் நடிகை ஷீலா கவுர். 1989 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த இவர், 1996 ஆம் ஆண்டு இளையதளபதி விஜய் நடித்த “பூவே உனக்காக ” எனும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதன் பின்னர் “கோல்மால், மாயா நந்தா ” போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகை ஷீலா, பின்னர், 2006 ஆம் ஆண்டு தனது 17 வயதில் நடிகர் நவ்தீப் கதாநாயகனாக நடித்த “இளவட்டம் ” என்ற தமிழ் படத்தின் மூலம் கதாநாயகியாக அவதாரமெடுத்தார். அதன் பின்னர், 2007 ஆம் ஆண்டு டி ராஜேந்தர் நடித்த “வீராசாமி ” படத்தில், அவரின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தமிழில் இவர், கடைசியாக 2008 ஆம் ஆண்டு அருண் விஜய் நடித்த “வேதா ” என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.அதன் பின்னர், தமிழில் எதிர்பார்த்த அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு,மலையாளம், கன்னடம் என பிற மொழி படங்களில் கவனம் செலுத்தி வந்தார் நடிகை ஷீலா கவுர்.
ஆனால், பிற மொழி படங்களிலும் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காததால், முன்னணி ஹீரோயினாக ஜொலிக்க தவறவிட்டார். .கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக இவரை தமிழ் சினிமாவில் காண முடியவில்லை, தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்து வரும் நடிகை ஷீலா,பட வாய்ப்புகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறாராம்.