மீண்டும் அஜித்தை வைத்து எடுத்தால் அது பிளாப் தான்.! ரசிகரின் டீவீட்டுக்கு பதிலடி கொடுத்த வெங்கட் பிரபு.!

0
885
Venkat Prabhu
- Advertisement -

அல்டிமேட் ஸ்டார் அஜித் மற்றும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான “மங்காத்தா” படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியடைந்தது. இந்த படம் வெளியாகி 7 ஆண்டுகள் நிறைவு பெற்றதை தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார் இயக்குனர் வெங்கட் பிரபு.

-விளம்பரம்-

இந்த படத்தில் அஜித் ஒரு வில்லன் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருப்பார். நீண்ட வருடங்களாக ஒரு ஹிட் படத்திற்காக காத்துக்கொண்டிருந்த நடிகர் அஜித்திற்க்கு “மங்காத்தா” படம் ஒரு மாபெரும் திருப்புமுனை படமாகவே அமைந்தது என்றே கூறலாம்.

இதையும் படியுங்க : தென்னிந்திய சினிமாவை மோசமாக விமர்சித்த டாப்ஸி.! வைரலாகும் வீடியோ.! 

- Advertisement -

அஜித் ரசிகர்கள் மட்டுமல்ல மற்ற ஹீரோகளின் ரசிகர்கள் கூட இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று நீண்ட வருடங்களாக இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் வேண்டுகளை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேர்கொண்ட பார்வை படத்தின் டீஸர் குறித்து ட்வீட் செய்திருந்தார் .

இந்த பதிவை பார்த்த ஒரு ரசிகர் வெங்கட் பிரபுவிடம் மீண்டும் அஜித்  வெங்கட் பிரபு கூட்டணி எப்போது என கேட்டுள்ளார், அதற்கு மற்றொரு ரசிகர் திரும்பவும் வெங்கட்பிரபு அஜித் கூட்டணி வைத்தால் படம் ஃபிளாப் ஆகும் என வெங்கட்பிரபுவுக்கு தெரியும். மேலும் வெங்கட்பிரபு கிட்ட  ஒழுங்கான கதை இல்லை என கூறியிருந்தார்.

-விளம்பரம்-

ஆனால் , இந்த பதிவை பார்த்து சற்றும் கோபப்படாதா வெங்கட் பிரபு’ வச்சிக்கிட்டா வஞ்சனை பண்றேன் என்னைக்கு என்கிட்ட கதை இருந்திருக்கு ‘ தனது பதிலளித்துள்ளார் .

Advertisement