துபாய் மெயின் ரோட்டில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவர் குத்தாட்டம் போட்ட வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் டாப் லிஸ்டில் இருப்பது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி கோலாகலமாக சென்று கொண்டு இருக்கிறது. மேலும், முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்து இருந்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான்.
மேலும், இதுவரை தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சிகளிலேயே இந்த நிகழ்ச்சி தான் டிஆர்பி -யில் முதலிடத்தில் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக வெங்கடேஷ் பத் மற்றும் தாமு இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் கொரோனா லாக்டவுனில் மக்களுக்கு இருந்த பிரச்சனைக்கு ஒரு மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது என்றே சொல்லலாம். இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் மாறினாலும் கடந்த 3 சீசன்களாக மாறாமல் இருப்பது இந்த நிகழ்ச்சியின் நடுவர்கள் தான்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி:
கடந்த மூன்று சீசன்களாக நடுவர்களாக செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பத் தான் இருந்து வருகின்றனர். இவர்கள் இருவருமே ஏற்கனவே பல டிவி நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கின்றனர். இவர்கள் இருவமே கோமாளிகளை ஒரு வழி செய்து விடுவார்கள் அதிலும் வெங்கடேஷ் பத் கோமாளிகளை வச்சி செய்து விடுவார். வெங்கடேஷ் பத் இந்தியா முழுக்க இருக்கும் பல்வேறு ஹோட்டல்களில் சிறப்பு செஃப்பாக இருந்து வருகிறார். இவர் அசைவம் சாப்பிடுவது இல்லை என்றாலும் வெறும் வாசனையை வைத்தே அதில் இருக்கும் உப்பு முதல்கொண்டு சொல்லிவிடுவார்.
செஃப் வெங்கடேஷ் பத் :
அந்த அளவிற்கு மிகவும் திறமையான ஒரு செஃப். இவர் முதன்முதலில் சமையல் சமையல் என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் சின்னத்திரையில் அறிமுகமானார். அதோடு ஆரம்பத்தில் இவர் நிகழ்ச்சியில் கடுமையான நடுவராக நடந்துகொண்டார். இதனால் பல பிரபலங்கள் விட்டால் போதும் என்று தெறிக்க விட்டு இருக்கிறார். ஆனால், தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர் மிக பிரபலமாகி இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் இவர் அடிக்கும் லூட்டிக்கு அளவேயில்லை. இவர் நிகழ்ச்சியில் கோமாளியை விட ஜாலியான ஒரு நடுவராக திகழ்ந்து வருகிறார் .
துபாயில் வெங்கடேஷ் போட்ட குத்தாட்டம்:
அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளார்கள். மேலும், இவர் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்று நடத்தி வருகிறார். அதில் சமையல் செய்து வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இதனால் இவருக்கு பெண் ரசிகர்கள் அதிகம் என்று சொல்லலாம். இந்த நிலையில் வெங்கடேஷ் பட் குத்தாட்டம் போட்டு இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், தற்போது வெங்கடேஷ் பட் விடுமுறைக்காக தன்னுடைய குடும்பத்துடன் துபாய் சென்று இருக்கிறார்.
இன்ஸ்டாவில் வெங்கடேஷ் பதிவிட்ட பதிவு:
அங்கு அவர் தன்னுடைய மகளுடன் துபாய் மெயின் ரோட்டில் நின்று நடனமாடி இருக்கிறார். அந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு புர்ஜ் கலீபா முன்னாடி ஒரு நடனம் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். தற்போது இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதை பார்த்து பலரும், சார் நீங்க சூப்பரா டான்ஸ் ஆடுறீங்க! என்று கமெண்ட்டுகளையும், லைக்ஸ்களையும் குவித்து வருகிறார்கள்.