“பள்ளிகளில் அதை கேட்பதை நிறுத்துங்கள்” – வெற்றிமாறனின் பாப்பரப்பு பேச்சு

0
509
- Advertisement -

சென்னையில் நடத்த நிகழ்ச்சியில் மாணவர்களின் முன்னால் சாதி சான்றிதழ் பற்றி இயக்குனர் வெற்றிமாறன் பேசியிருப்பது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக வெற்றிமாறன் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் இயக்கிய படங்கள் எல்லாம் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆரம்பத்தில் இவர் இயக்குனர் பாலு மகேந்திராவிடம் தான் உதவி இயக்குனராக இருந்தார். அதற்கு பின் தான் வெற்றி மாறன் இயக்குனராக சினிமா உலகில் களம் இறங்கினார்.

-விளம்பரம்-

இவர் முதன் முதலாக பொல்லாதவன் என்ற படத்தை தான் இயக்கி இருந்தார். அதன் பிறகு பெரும்பாலும் வெற்றிமாறன்– தனுஷ் காம்பினேஷனில் வெளிவந்த படங்கள் எல்லாமே தாறுமாறு. இவர் ஆடுகளம், உதயம், காக்கா முட்டை, வடசென்னை உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். இறுதியாக தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த அசுரன் படம் மிகப்பெரிய அளவு வெற்றி பெற்று இருந்தது. கடந்த ஆண்டு டெல்லியில் நடந்த தேசிய திரைப்பட விழாவில் தனுஷும், வெற்றிமாறனும் அசுரன் படத்திற்காக தேசிய விருது வாங்கி இருந்தார்கள்.

- Advertisement -

மாணவி கேள்விக்கு பதிலளித்த வெற்றிமாறன் :

இப்படி பட்ட நிலையில் தான் வெற்றிமாறன் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற தமிழ் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை என்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்தார். அப்போது பேசுகையில் மாணவி ஒருவர் “அணைத்து சாதிகளும் சமம் என்று அரசாங்கமே கூறுகையில் சாதி சான்றிதழ் ஏன் கண்டிப்பாக வேண்டும் என்கின்றனர் என்று அந்த மாணவி கேட்டார்.

நீதி மன்றம் வரை சென்று விட்டேன் :

அதற்கு பதிலளித்த இயக்குனர் வெற்றிமாறன் இது எனக்கே மிக கொடுமையாக இருக்கிறது. என் பிள்ளைகளுக்கு எந்த சாதியும் வேண்டாம் என்று சாதியற்றவர் என பெற முயன்றேன் ஆனால் அதை தர முடியாது என்று கூறினார்கள். நான் இதற்கு நீதிமன்றம் வரை சென்று விட்டேன் ஆனால் அங்கேயும் ஏதாவது ஒரு சாதியை நிரப்ப வேண்டும் என்று சொல்லிவிட்டனர். மற்ற சில விஷியங்களை சொல்லியும் ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டனர்.

-விளம்பரம்-

சாதி சான்றிதழ் கேட்பது கூடாது :

நானும் சாதி சான்றிதழை தராமல் இருக்கவே பல இடங்களில் முயற்சித்து வருகிறேன். அதே போல சாதி சான்றிதழை பள்ளிகளிலும் கேட்பதை நிறுத்த வேண்டும். ஒருவருக்கு அது தேவையில்லை என்றால் அதனை மறுக்கும் உரிமை இருக்க வேண்டும். அதே நேரம் சாதி சான்றிதழ் யாருக்கு தேவை படுகிறதோ அதனை அவர்கள் கொடுக்கின்றன உரிமையை இருக்க வேண்டும் என்று நினைக்கிறன் என கூறினார்.

விருப்பமாக இருக்க வேண்டும் :

மேலும் அவர் கூறுகையில் நான் சமூங்க நீதிக்காக சில இடங்களில் அதனை உபயோகப்படுத்தும் கட்டாயம் இருக்க வேண்டும். சில இடங்களில் சாதி சான்றிதழ் தேவை பட்டால் கொடுக்கின்ற உரிமையும், அது தேவையில்லை என்றால் அதனை மாறுக்கின்ற உரிமையும் அவரவர் விருப்பமாக இருக்க வேண்டும். ஆனால் சில நேரங்களில் சமூக நீதியை நிலைநாட்ட அது தேவை என்று கூறினார் இயக்குனர் வெற்றிமாறன்.

Advertisement