-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

ரஜினி பொண்டாட்டி, பொண்ணுங்க கிட்ட கேளுங்க? ஹேமா கமிட்டி பற்றி ஆதங்கத்தில் விசித்ரா சொன்னது

0
76

ஹேமா கமிட்டி விவகாரம் தொடர்பாக விசித்ரா அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே ஹேமா கமிட்டி அறிக்கை குறித்த செய்தி தான் இணையத்தில் அதிகமாக வைரலாக்கப்பட்டு வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு சினிமா துறையில் இருக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் ரீதியான பிரச்சினைகளை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி ஒன்று கேரள மாநில அரசு அமைத்திருந்தது.

-விளம்பரம்-

இது தொடர்பாக விசாரணையும் நடத்தி கடந்த 2019 ஆம் ஆண்டு முதலமைச்சர் பினராய் விஜயன் இடம் 233 பக்க அறிக்கை ஆவணங்கள், ஆடியோ, வீடியோ ஆதாரத்துடன் சமர்ப்பித்து இருந்தார்கள். ஆனால், இதை பல காரணங்களால் அரசு வெளியிடாமல் இருந்தது. பின் கடந்த மாதம் 19 ஆம் தேதி ஹேமா கமிட்டி அறிக்கையை அரசு வெளியிட்டது. இது மலையாள திரை உலகில் மிகப்பெரிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

ஹேமா கமிட்டி:

இதை எடுத்து பல நடிகைகள், மலையாள நடிகர்கள் மீது புகார் கொடுத்து இருக்கிறார்கள். இதை அடுத்து கேரளா அரசு குழு ஒன்று அமைத்து விசாரித்து வருகிறது. இது தொடர்பாக பிரபலங்கள் பலருமே தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் நடிகை விசித்ரா அளித்த பேட்டியில், ஹேமா கமிட்டி குறித்து ரஜினியிடம் கேட்டால் அவர் எப்படி பதில் சொல்லுவார். அவருடைய மனைவி, மகள்கள் இடம் போய் இந்த பிரச்சனையை குறித்து கேள்வி கேளுங்கள்.

விசித்ரா பேட்டி:

-விளம்பரம்-

இந்த விவகாரம் பற்றி பல முன்னணி நடிகர்கள் பேசாமல் மௌனம் காத்து வருகிறார்கள். இதற்காக ஒவ்வொரு இடமும் சென்று பேசுங்கள், இதை பற்றி கேளுங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்க முடியாது. மேலும், அந்த சம்பவம் நடந்த போதே சொல்லி இருக்கலாமே என்று பலர் கேட்கிறார்கள். ஆனால், எனக்கு அது நடந்தபோது நான் நடிகர் சங்கம், காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தேன். எதுவுமே நடக்கவில்லை என்று ஆதங்கத்தில் கூறியிருந்தார்.

-விளம்பரம்-

விசித்ரா குறித்த தகவல்:

தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் பிரபலமான கவர்ச்சி நடிகையாக இருந்தவர் விசித்ரா. இவர் 1991 ஆம் ஆண்டு வெளிவந்த பொற்கொடி என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகியிருந்தார். அதனை தொடர்ந்து இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து இருந்தார். இவர் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.

விசித்ரா திரைப்பயணம்:

அதோடு இவர் கவுண்டமணி- செந்தில் உடன் சேர்ந்து பல காமெடி மற்றும் கவர்ச்சி காட்சிகளிலும் நடித்திருந்தார். பின் இவர் ஹோட்டல் மேனேஜர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மூன்று மகன்கள் இருக்கிறார்கள். திருமணத்திற்கு பின்பு விசித்ரா சினிமாவில் இருந்து விலகி தன் குடும்பத்தை மட்டும் கவனித்து வந்தார். பின் கடந்த ஆண்டு தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் இவர் சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்தார். அதன் பின் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இவர் சிறப்பாக விளையாடி இருந்தார்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news