சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இசை அமைப்பாளர் வித்யாசாகர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதிலும், விஜய் டிவியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் வந்தாலும் ஆணிவேராக மக்கள் மத்தியில் இடம் பிடித்திருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சி பல ஆண்டு காலமாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும், இந்த நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என்று இரு பிரிவில் ஒளிபரப்பாகி வருகிறது. அதோடு இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ஏகப்பட்ட பேருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சொல்லப்போனால், இந்த நிகழ்ச்சி தான் வெள்ளித்திரைக்கு பாடகர்களை அறிமுகப்படுத்தும் பாலம் என்று சொல்லலாம். அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி:
சூப்பர் சிங்கர் சீனியர்ஸ் நிகழ்ச்சியை விட மழைலை குரல்கள் ஒலிக்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் நிகழ்ச்சிக்கு தான் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு பெற்று இருக்கிறது. கடந்த ஆண்டு சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் 8 நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியை மா கா பா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே தான் தொகுத்து வழங்கி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு நடுவராக ஸ்வேதா மோகன், பென்னி தயால், அனுராதா ஸ்ரீராம், சரண் மற்றும் உன்னிகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று வருகின்றனர்.
Live composition on the stage with orchestra! #Vidhyasagar the genius! 🔥🔥 pic.twitter.com/Cpqp9InDkb
— 𝔻𝕣. 𝔹𝕠𝕙𝕣𝕒 𝕄𝔻. 𝔸𝕀ℝ𝔻 (@Vasheegaran) May 2, 2023
சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 9 நிகழ்ச்சி:
தற்போது புத்தம் புதிதாக சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 9 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்தே விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் சர்வதேச பகுதியிலிருந்தும் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு 20 திறமையான பாடல்களை தேர்வு செய்தார்கள். இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாளில் இருந்து தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
நிகழ்ச்சியில் வித்யாசாகர்:
இந்நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்த ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது,
இந்த நிகழ்ச்சிக்கு பிரபலமான இசையமைப்பாளர்கள், நடிகர்கள் என பலரும் சிறப்பு விருந்தினராக வருவார்கள். அந்த வகையில் இந்த முறை இசையமைப்பாளர் வித்யாசாகர் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார். நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அவரிடம் பாடல் வரிகளை கூறியவுடன் அவர் சில நிமிடங்களிலேயே இசைத்து ஒரு பாடலை உருவாக்கி இருக்கிறார். இது அங்கிருந்த போட்டியாளர்கள், நடுவர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
Wow , my favorite music director, truly genius! #Vidhyasagar sir ! Poovasam purapadum penne , Malare mounamaa, azhagooril poothavale are my fav and class compositions. https://t.co/ilR86Rwggt
— Jana krish (@janarthanan_21) May 2, 2023
வித்யாசாகர் குறித்த தகவல்:
அது மட்டும் இல்லாமல் அவரை பலரும் பாராட்டிருந்தார்கள் தற்போது இது தொடர்பான வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா சினிமா உலகில் மிகப் பிரபலமான இசையமைப்பாளராக திகழ்பவர் வித்யாசாகர். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி போன்ற பிறமொழி படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார். இவர் மேற்கத்திய இசையும் திறன் பட கற்றவர். மேலும், இவர் இசையமைப்பாளர் மட்டுமில்லாமல் பாடகரும் ஆவார். இவருடைய இசை திறமைக்காக பல்வேறு விருதுகளையும் வாங்கி இருக்கிறார்.