நயன் மட்டுமல்ல விக்னேஷ் சிவனும் காதல் தோல்வியடைந்தவர் தானாம் – 9 ஆண்டு காதல் பிரிந்த காரணம் குறித்து அவரே சொன்ன விஷயம்.

0
815
- Advertisement -

தனது முதல் காதல் பிரேக்கப் குறித்து விக்னேஷ் சிவன் அளித்திருக்கும் பேட்டி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் எத்தனையோ காதல் ஜோடிகள் இருக்கின்றனர் அந்த வகையில் விக்னேஷ் சிவன் நயன்தாரா ஜோடியின் ஒருவர் விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடிதான் படத்தில் நயன்தாரா நடித்த போது இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டது பல ஆண்டுகள் நீடித்த இந்த காதல் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணத்தில் முடிந்தது மிகவும் விமர்சையாக இந்த திருமணம் நடைபெற்று இருந்தது திருமணத்திற்கு பின்னர் சில மாதங்களிலேயே இரண்டு ஆண் குழந்தைகளை வாடகைக்குத் தாய் மூலம் பெற்றெடுத்ததாக அறிவித்திருந்தார்கள் விக்னேஷ் சிவன் நயன்தாரா தம்பதி.

-விளம்பரம்-
vignesh

திருமணமே ஆகாமல் எப்படி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றார்கள் என்ற சர்ச்சை வெடித்து இருந்தது ஆனால் முறைப்படி திருமணம் செய்வதற்கு முன்பாகவே பதிவுத் திருமணம் செய்து கொண்டதாகவும் பதிவு திருமணம் செய்து கொண்ட பின்னரே வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதி வாங்கியதாகவும் விக்னேஷ் சிவன் நயன்தாரா தம்பதி விளக்கமளித்து இருந்தார்கள் தற்போது இவர்கள் இருவரும் தங்களின் இரு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்

- Advertisement -

நயன்தாரா இரண்டு முறை காதல் தோல்வி அடைந்தவர் என்பது ஊரறிந்த விஷயம்தான். ஆனால் நயன்தாராவை போல விக்னேஷ் சிவனும் காதல் தோல்வி அடைந்தவர் தான். அதிலும் ஒன்பது வருடங்களாக ஒரே பெண்ணை காதலித்து தோல்வி அடைந்தவர் தான் என்பது பலருக்கும் தெரியாத விஷயம். இது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய விக்னேஷ் சிவன் நான் ஒன்பது வருடங்களாக ஒரு பெண்ணை காதலித்தேன்.

அந்த பெண் மிகவும் மாடர்ன் ஆனவர், என்னுடைய அம்மா ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர். ஒருமுறை தீபாவளி வண்டியின் போது முதன்முறையாக என்னுடைய காதலியை என்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றிருந்தேன். அன்று தீபாவளி என்பதால் வீட்டில் இருந்த அனைவருமே பாரம்பரிய உடை அணிந்து இருந்தார்கள். ஆனால், என்னுடைய காதலி ஜீன்ஸ் மற்றும் டீ சர்ட் அணிந்து கொண்டு படு மாடனாக வந்திருந்தார்.

-விளம்பரம்-

என்னுடைய அம்மாவும் எனது காதலியும் சந்தித்த முதல் சந்திப்பு நன்றாக அமையவில்லை. என்னுடைய அம்மாவிற்கு அவ்வளவாக அவங்களை பிடிக்கவில்லை, என் அம்மாவிடம் அவள் நடந்து கொண்ட விதமும் என் அம்மாவிற்கு பிடிக்கவில்லை. அவளுக்கும் என் அம்மா நடந்து கொண்ட விதமும் பிடிக்கவில்லை. இதற்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் என்னுடைய வீட்டில் சாப்பிடும்போது சாம்பார் ஒரு கரண்டியில் எடுத்தால் அதே கரண்டியில் தான் ரசம் எடுப்பார்கள்.

ஆனால் அது என்னுடைய காதலிக்கு பிடிக்கவில்லை இது ஒரு சாதாரணமான விஷயம் தான் என்றாலும் இது போன்ற சின்ன சின்ன விஷயங்கள் அவருக்கு செட் ஆகாமல் போனது நாங்கள் ஒன்பது ஆண்டுகள் காதலித்து வந்தோம் அது சுமூகமானதாகவும் இல்லை குடும்பத்திற்கும் செட் ஆகவில்லை இதனால் எங்களுடைய காதலை நாங்கள் பிரேக் அப் செய்து விட்டோம் என்று கூறியிருக்கிறார். இப்படி ஒரு நிலையில் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு நயனுடனான தனது 10 ஆண்டு காதலை கொண்டாடி வருகிறார் விக்னேஷ் சிவன்.

Advertisement