ஐயோ,எனக்கு வேண்டாம் தம்பிக்கு செய்ங்க,அவர் தான் வளர்ந்து வந்துட்டு இருக்கார் – விஜய்க்காக விட்டு கொடுத்துள்ள கேப்டன்.

0
142
- Advertisement -

மக்கள் மத்தியில் கேப்டன் என்ற பட்டதோடு என்றென்றும் மறக்க முடியாத ஒரு நபராக திகழ்ந்தவர் விஜயகாந்த். இவர் நடிகர், அரசியல்வாதி என்பதை தாண்டி ஒரு நல்ல மனிதர் என்றே சொல்லலாம். புரட்சி கலைஞர் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டவர். கடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்த் உடல் நல குறைவின் காரணமாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று இருந்தார்.அதோடு இவர் அடிக்கடி தொடர் சிகிச்சைக்கு சென்று இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விஜயகாந்த் அவர்கள் இருமல், சளி அதிகமாக உள்ளதால் அவருக்கு மூச்சு சளி சிரமம் ஏற்பட்டு இருந்தது.

-விளம்பரம்-

அதற்கு பின் விஜயகாந்தின் உடலில் முன்னேற்றம் ஏற்பட்டதால் வீட்டுக்கு திருப்பினார். பிறகு மீண்டும் நடிகர் விஜயகாந்த் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.விஜயகாந்த் மறைவு அவரின் குடும்பத்தை மட்டும் இல்லாமல் தமிழக மக்களையும் அதிகம் பாதித்து இருக்கிறது. அவர் மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து இருந்தார்கள்.

- Advertisement -

அந்த வகையில் நடிகர் விஜய் முதல் நாளே கேப்டனின் உடலுக்கு நேரில் சென்று தனது அஞ்சலியை செலுத்தினார். அதுவும் கேப்டனின் முகத்தை பார்த்தபடி விஜய் உடைந்து நின்ற காட்சி பலரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இப்படி ஒரு நிலையில் விஜய்காக கேப்டன் செய்த விஷயம் குறித்து பிரபல சண்டை பயிற்சியாளர் ஜாகுவார் தங்கம் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். விஜய் மற்றும் விஜயகாந்த் புகைப்படத்தை தேடினால் இருவரும் ஒரு ஜிம்மில் இருக்கும் புகைப்படம் ஒன்றும் வரும்.

அந்த ஜிம் உரிமையாளர் ஜாகுவார் தங்கம் தான். அந்த ஜிம் திறப்பு விழாவிற்கு கேப்டன் மற்றும் விஜய் இருவரும் வந்துள்ளனர். இதுகுறித்து நான் கேப்டனுக்கு போன் செய்து சொன்னேன், சார் விஜய்யும் வாரார் அவருக்கு போஸ்டர் எல்லாம் அடித்துவிட்டேன் என்று கூறினேன். அதற்கு கேப்டன் ‘ஓ அப்படியா, அப்போ அவருக்கு மட்டும் போஸ்டர் அடியுங்க, எனக்கு வேண்டாம், அவர் வளர்ந்து வரவர் என்று சொன்னார்’ என்று ஜாகுவர் தங்கம் கூறியுள்ளார்.

-விளம்பரம்-

தற்போது நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு படு மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தில் AI தொழில் நட்பம் மூலம் விஜயகாந்த்தை கொண்டு வர இருக்கின்றனர். இதற்காக கேப்டன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் வெங்கட் பிரபு அனுமதி பெற்று இருக்கிறார். கேப்டன் வரும் காட்சிகளை படத்தின் ரீலுசுக்கு முன்னரே தங்களுக்கு காட்ட வேண்டும் என்று கேப்டன் குடும்பம் நிபந்தனையும் விதித்துள்ளது.

நடிகர் விஜய்க்கும் கேப்டனுக்கு ஒரு நெருங்கிய உறவு இருந்தது. ஆரம்பத்தில் விஜயகாந்த் நடித்த பல படங்களை விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி தான் இயக்கினார். அதன் நன்றிக்கடனாக விஜய் நடிகராக அறிமுகமான போது அவருடன் சேர்ந்து படங்களில் நடித்த கேப்டன். விஜயகாந்த்தின் இறப்பிற்கு கூட நடிகர் விஜய் நேரில் சென்று தனது அஞ்சலியை செலுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement