தடைக்கு மேல் தடை – அஜித் படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவனின் அடுத்த படத்திற்கும் வந்த சிக்கல்.

0
537
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் விக்னேஷ் சிவன். இவர் இயக்குனர் மட்டுமில்லாமல் பாடலாசிரியர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகங்களைக் கொண்டவர். இவர் போடா போடி என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமாகி இருந்தார். கடைசியாக இவர் இயக்கத்தில் வெளிவந்த காத்து வாக்குல ரெண்டு காதல் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் நயன்தாரா, சமந்தா, விஜய் சேதுபதி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

-விளம்பரம்-

இதை அடுத்து விக்னேஷ் சிவன் அவர்கள் அஜித்தை வைத்து படம் இயக்குவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது. இது அஜித்தின் 62வது படம் ஆகும். இந்த படத்திற்கான வேலைகளை விக்னேஷ் சிவன் செய்து இருந்தார். ஆனால், படத்தினுடைய ஒன் லைன் கதை தயாரிப்பு நிறுவனத்திற்கு பிடிக்கவில்லை என்றவுடன் அந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டார். அதற்கு பிறகு அஜித்தின் படத்தை மகிழ்ந்திருமேனி இயக்க இருக்கிறார். தற்போது விக்னேஷ் சிவன் அவர்கள் தன்னுடைய கனவு திரைப்படமான எல்ஐசி என்ற படத்தை எடுக்க முடிவெடுத்து இருக்கிறார்.

- Advertisement -

எல்ஐசி படம்:

இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்க வைக்கிறார். மேலும், இந்த படத்தை நடிகர் கமலஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. பின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கும் பொறுப்பில் இருந்து விலகி விட்டது. பின் செவன் ஸ்கிரீன் நிறுவனம் தான் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. மேலும், இந்த படத்தில் கீர்த்தி செட்டி, எஸ் ஜே சூர்யா நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் பூஜை நடைபெற்றது.

எஸ் எஸ் குமரன் அறிக்கை :

இந்த நிலையில் விக்னேஷ் மீது வழக்கு தொடர இருப்பதாக இயக்குனர் எஸ் எஸ் குமரன் அறிக்கை ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், விக்னேஷ் சிவன் இயக்கருக்கும் புது படத்திற்கு எல்ஐசி என்று பெயர் வைத்திருப்பதை கண்டு நான் அதிர்ச்சி அடைந்து விட்டேன். அது மட்டும் இல்லாமல் எனக்கு மன உளைச்சலும் ஏற்பட்டிருக்கிறது. காரணம், எல் ஐ சி என்ற பெயரை 2015 ஆம் ஆண்டு என்னுடைய தயாரிப்பு நிறுவனமான சுமா பிக்சர்ஸ் வாயிலாக பதிவு செய்து வைத்திருக்கிறேன்.

-விளம்பரம்-

எல்ஐசி தலைப்பு குறித்து சொன்னது:

இதை அறிந்த விக்னேஷ் சிவன் தன்னுடைய புதிய படத்திற்கு அந்த பெயரை தர வேண்டும் என்று என்னுடைய மேலாளர் மூலம் என்னைக்கு அணுகினார். ஆனால், எல்ஐசி என்ற தலைப்பு நான் இயக்கம் படத்திற்கு மிக சரியாக பொருந்துவதாலும் கதையின் உடைய பலமே அந்த தலைப்பை ஒட்டி அமைவதாலும் நான் தர மறுத்து விட்டேன். அதோடு இந்த தலைப்பை நான் முறைபடியாக பதிவு செய்தும் வைத்திருக்கிறேன் என்பதை விக்னேஷ் சிவனிடம் நன்றாக தெளிவுபடுத்தினேன்.

விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடர காரணம்:

அப்படி இருந்தும் இந்த தலைப்பை அவர் தன்னுடைய படத்திற்கு வைத்திருக்கிறார். இது சட்டத்திற்கு புறமானது மட்டுமல்ல, எளிய சிறிய தயாரிப்பார்களை நசுக்கும் செயலாகும். இந்த செயல் முழுக்க முழுக்க அதிகாரத் தன்மை கொண்டது. எல்ஐசி என்ற தலைப்பு என்னிடம் மட்டுமே இருப்பதால் இதை விக்னேஷ் சிவன் தன் படத்தில் எந்த விதத்திலும் பயன்படுத்தக்கூடாது என்பதை நான் இதன் மூலம் தெரியப்படுத்த விரும்புகிறேன். இனியும் இந்த செயலை விக்னேஷ் சிவன் தொடர்வார் என்றால் சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுப்பேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார். இப்படி விக்னேஷ் சிவனுக்கு அடி மேல் அடி விழுவது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறது.

Advertisement