நயன்தாராவை போன்றே வேறு ஒரு புதிய பெண் நடித்துள்ளார்.! விக்னேஷ் சிவனின் நக்கல்.!

0
391
Vignesh-Shivan

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்றழைக்கபடும் நயன்தாரா கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதில் பெரும்பாலும் வெற்றியும் அடைகிறார். தற்போது ஐரா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ஏற்கனவே மாயா என்ற திகில் படத்தில் நடித்தார். இந்த படத்தில் பேயாக வந்தும் மிரட்டினார். இப்போது ஐரா படத்திலும் திகில் கதையில் தான் நடித்துள்ளார் நயன்தாரா. இயக்குனர் சார்ஜுன் இயக்கியுள்ள இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

‘மறுபடியும் பொட்ட புள்ள பிறந்திருக்குய்யா’ என்றதும் ‘என்னது மறுபடியுமா’ என்று ஒரு பெண் பதறுவதுபோல் பேசுகிறார். இதன் மூலம் இந்த படம் பெண் சிசு கொலை சம்மந்தபட்ட படமாக இருக்குமோ என்ற எண்ணம் தோன்றியது.

சமீபத்தில் இந்த படத்தில் இருந்து மேகதூதம் என்ற பாடல் வெளியாகி இருந்தது. இந்த பாடலை பாராட்டிய நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன், அருமையான பாடல் ஐரா படத்தில் இருந்து. தாமரை மேடம் ஒவ்வொரு பாடல் வாயிலாகவும் நம்மை ஆச்சிர்யப்பட வைக்கிறார். ஜீனியஸ் அவர். இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு மற்றோரு ஹிட் ஆக அமைய வாழ்த்துக்கள்.  நயன்தாரா போலவே உள்ள பெண்ணை நடிக்க வைத்துள்ளது சுவாரஸ்யமாக உள்ளது. என்று நயன்தாராவை கிண்டலடித்துள்ளார்.