தனுஷ் படத்தில் நடிக்க எனக்கு விருப்பமே இல்லை, விக்னேஷ் சிவனின் அதிரடி பேட்டி – அவர் சொன்ன காரணம் இதோ.

0
400
vignesh
- Advertisement -

நடிகர் தனுஷ் படத்தில் எனக்கு நடிக்க விருப்பமே இல்லை என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விக்னேஷ் சிவன். இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமில்லாமல் நடிகர், திரைப்பட பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு விளங்குகிறார். இவர் இயக்கத்தில் வெளிவந்த போடா போடி, நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களெல்லாம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று இருந்தது.

-விளம்பரம்-
Nayanthara And Vignesh Shivan Wedding Date| நயன் திருமணம்

இதனிடையே விக்னேஷ் சிவன்- நயன் காதலித்து வருவது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. இவர்களின் திருமணத்திற்காக ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் காத்து கொண்டு இருக்கின்றனர். அதுமட்டும் இல்லாமல் நடிகை நயன்தாரா எங்கு சென்றாலும் தனது காதலர் விக்னேஷ் சிவன் இல்லாமல் செல்வதே இல்லை. அதோடு நயன்தாரா-விக்னேஷ் சிவன் நிச்சயதார்த்தம் மிகவும் privateஆக முடிந்தது. ஆனால், திருமணத்தை அனைவருக்கும் சொல்லிவிட்டு தான் பண்ணுவோம் என்று கூறி இருந்தார்கள்.

- Advertisement -

காத்துவாக்குல ரெண்டு காதல் படம்:

நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது ஹாட் காதல் ஜோடிகளாக திரையுலகில் வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர். இருந்தாலும் இவர்கள் இருவரும் படங்களில் பிசியாக பணி புரிந்து வருகிறார்கள். சமீபத்தில் இவர்கள் இயக்கத்தில் வெளிவந்து இருந்த ராக்கி படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதேபோல் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் பணிபுரிந்து இருந்தார்கள். சமீபத்தில் தான் இந்த படம் வெளியாகி இருந்தது.

ஏகே 62 படம்:

இந்த படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா, கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், கலா மாஸ்டர் கிரிக்கெட் பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். மேலும், இப்படத்தினை தயாரிப்பாளர் லலித் குமார் தயாரித்து இருக்கிறது. இந்த படம் முழுக்க முழுக்க ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகி இருக்கிறது. மேலும், பெரிய எதிர்பார்ப்புடன் திரைக்கு வந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வந்த விமர்சனத்தை பெற்று இருக்கிறது. இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன், அஜித்தின் ‘ஏகே 62’ படத்தை இயக்குகிறார். சமீபத்தில் தான் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

விக்னேஷ் சிவன் அளித்த பேட்டி:

லைகா புரொடக்ஷன் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடிகர் விக்னேஷ் சிவன் அவர்கள் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் தனுஷ் படத்தில் நடிக்க விருப்பமில்லை என்று கூறி இருக்கிறார். அது என்னவென்றால், நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் வேல்ராஜ் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த படம் வேலையில்லா பட்டதாரி. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

தனுஷ் படத்தில் நடிக்க காரணம்:

எட்டு கோடியில் உருவாகி இருந்த படம் 50 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருந்தது. இந்த படத்தின் இறுதிக்காட்சியில் விக்னேஷ் சிவன் நடித்திருப்பார். இந்த காட்சிகள் நல்ல வரவேற்பையும் பெற்று இருந்தது. இதில் நடித்த அனுபவம் குறித்து விக்னேஷ் சிவன் கூறி இருந்தது, இந்த படத்தில் நடிப்பதில் எனக்கு ஆர்வமில்லை. விருப்பம் இல்லாமல் தான் வேலை இல்லா பட்டதாரி படத்தில் நடித்தேன். அந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தவர் அன்று வரவில்லை என்பதால் தான் தனுஷ் சார் என்னை நடிக்க வைத்தார் என்று கூறியிருக்கிறார்.

Advertisement