விஜய் 62 படத்தை பற்றி கசிந்த தகவல் ! குஷியில் ரசிகர்கள் -லேட்டஸ்ட் அப்டேட் !

0
1281

மெகா ஹிட் கூட்டணியானா இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் மற்றும் இளையதளபதி விஜய் இணையும் 3வது படம் தளபதி-62.இந்த படத்தின் ஷூட்டிங் மிகவும் மும்மரமாக நடந்து வருகின்றது.சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாகவும் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் இசியமைப்பாளராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

vijay-62

கத்தி படத்தை விவசாயத்தை மையப்படுத்தி எடுத்திருந்த முருகதாஸ் இந்த படத்தின் கதையும் வியசாயிகளின் கஷ்டங்களை மையப்படுத்திய கதையாகவே இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகின.மேலும் தற்போது கிடைத்த கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த படத்தில் அரசியல் பற்றியும் பேசப்ட்டுள்ளது என்று பேசப்படுகிறது.சமீபத்தில் வெளியாகி மக்களிடையே மாபெரும் வெற்றிபெற்ற படம் மெர்சல். இந்த படத்தில் மத்திய அரசை தாக்கி பல வசனங்கள் இருந்தது, குறிப்பாக ஜிஎஸ்டீ பற்றிய வசனங்களால் பல சர்ச்சைகள் எழுந்தன. அதுமட்டும் இன்றி அரசியல் கட்சிகளால் படத்திற்கு எதிர்ப்பும் வந்தது, ஆனால் தடைகளை தாண்டி படம் வெற்றிபெற்றது.

விஜய் 62 படத்தில் விவசாயம் சார்ந்த கதை என தகவல் வெளிவந்தன, இதனால் விவசாயிகளின் பிரச்சனைகளை கதையில் அழுத்தமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. சமீப காலமாக விவசாயிகள்,தங்களது விவசாய கடன் தள்ளுபடி செய்யக்கூறி பல போராட்டங்களை நடத்தினர், எனவே இந்த பிரச்சனைகளையும் படத்தில் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஏற்கானவே விஜயின் ரசிகர்கள் அனைவரும் அவர் அரசியளுக்கு வரவேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து வரும் நிலையில் தற்போது விஜய் அரசியல் பற்றி பேசக்கூடிய படத்தில் நடிக்க போகிறார் என்ற தகவல்களை கேட்ட ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.