விஜய் 62 போட்டோ ஷுட்டில் கீர்த்தி செய்த செயல்.! கோபத்தில் ரசிகர்கள்.! உள்ளே பாருங்க புரியும்

0
1201

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் விஜய் , விக்ரம், சூர்யா போன்ற பல முன்னணி நடிகர்களுடனும் நடித்துவிட்டார். அதுமட்டுமல்லாமல் இளையதளபதி விஜயுடன் ‘பைரவா ‘ படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக ‘விஜய் 62 ‘ படத்திலும் ஜோடியாக நடித்து வருகிறார்.

vijay-62

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் நடித்துவரும் ‘விஜய் 62 ‘ படத்தின் சில புகைப்படங்கள் சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் கூட இந்த படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட ஒரு பிரத்யேக புகைப்படம் ஒன்று வெளியாகி இருந்தது.

அதில் கீர்த்தி சுரேஷ் ஒரு சோபாவிலும், விஜய் தரையில் அமர்ந்திருப்பது போலவும் இருந்தது. இந்த புகைப்படத்தை, விஜய் 62 படத்தில் பணிபுரிந்து வரும் ஸ்டைலிஷ் தான் அனுமதி இல்லாமல் வெளியிட்டுள்ளார் என்று தெரியவந்து பின்னர் அதனை நீக்கி விட்டனர்.

vijay

keerthi-suresh

இருப்பினும் அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் நடிகை கீர்த்தி சுரேஷிற்கு புதிய சர்ச்சை ஒன்றை கிளப்பியுள்ளது. அந்த புகைப்படத்தில் சோபாவில் சோபாவில் அமர்த்திருக்கும் கீர்த்தி சுரேஷ், தரையில் அமர்த்திருக்கும் விஜயின் கால் மீது கால் வைத்திருந்தது போல இருந்தது.

இதனை பார்த்து கோபமடைந்த விஜய் ரசிகர்கள் கீர்த்தி சுரேசை கலாய்த்து சமூக வலைத்தளங்களில் பல மீம்களை போட்டு வருவதோடு. எப்படி நீங்கள் விஜய்யின் கால் மீது காலை வைக்கலாம், உங்களுக்கென அவ்வளவு திமிரா என்று கீர்த்தி சுரேசை திட்டி தீர்த்து வருகின்றனர்.