அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட விஸ்வரூபம் 2 டிரைலர்.! அதிரடி காட்சிகள்

0
737
Viswaroopam-2

கமல் அரசியலில் ஈடுபட்ட பிறகு இனிமேல் அவர் படங்களில் நடிக்க மாட்டாரோ என்று அவரது ரசிகர்கள் சற்று சோகத்தில் இருந்து வந்தனர். மேலும், அவர் நடித்து வந்த ‘பல்ராம் ராயுடு’ படமும் ஒரு சில பிரச்சனைகள் காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது. இந்நிலையில் கமல் ரசிகர்களுக்கு தெம்பூட்டும் விதமாக ‘விஸ்வரூபம்’ படத்தின் தகவல் ஒன்று வெளியாகியிருந்தது.

தமிழில் கமல்ஹாசன் இயக்கி, நடித்த `விஸ்வரூபம்’ திரைப்படம், பல்வேறு தடைகளுக்குப் பிறகு கடந்த 2013-ல் வெளியானது. இந்தப் படத்தின் முதல் பாகம் எடுக்கும்போதே, இரண்டாம் பாகத்துக்கான 40 சதவிகித படப்பிடிப்பும் முடிவடைந்த நிலையில் , இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் கமல் நடித்துள்ள ‘விஸ்வரூபம் 2’ படத்தின் ட்ரைலர் இன்று (ஜூன் 11) ஆம் தேதி மாலை 5 மணி அளவில் வெளியானது. இந்த படத்தின் பாலிவுட் ட்ரைலரை பாலிவுட் நடிகர் அமீர் கானும், தமிழ் படத்தின் ட்ரைலரை ஸ்ருதி ஹாசனும் வெளியிட்டனர்.

சுமார் 1.45 நீ,நிமிடம் ஓடும் இந்த படத்தின் ட்ரைலர் ‘விஷ்வரூபம் ‘ படத்தின் முதல் பாகத்தை போன்றே மிகவும் விறுவிறுப்பாக இருக்கிறது. இந்த படத்தின் முதல் பாகத்தில் நடித்த பெரும்பாளான நடிகர், நடிகைகளும் இந்த இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்ட 45 நிமடத்திலேயே 18 ஆயிரத்திற்கு மேற்ப்பட்டோரால் பார்க்கப்பட்டுள்ளது.