விஜய் 62 டைட்டில் இதுவா.! வைரலாகும் போஸ்டர்.! விஜய் ரசிகர்கள் பதிலடி.! புகைப்படம் உள்ளே

0
1188
vijay

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் மற்றும் விஜய் இணைந்துள்ள ‘விஜய் 62’ படத்தின் படப்பிடிப்புகிக்ள் மும்மரமாக நடந்து வருகிறது. விஜய் பிறந்தநாளான வரும் 22-ம் தேதி தனது படத்தின் டைட்டில் மற்றும். ஃபஸ்ட்லுக்கை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க இருக்கிறார் நடிகர் விஜய் என்றும் தகவல்கள் வெளியாகின.

முருகதாஸ் படத்தில் எத்தனை வேஷமோ என்று எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இதுவரை ‘விஜய் 62’ என்று புதுப்படத்தின் பெயரை உச்சரித்து வந்தவர்கள் விஜய் பிறந்தநாளான  ஜூன் 22-ம் தேதி முதல் விஜய் பட டைட்டிலை முணுமுணுப்பார்கள். அன்றைக்கு விஜய் படத்தில் ஃபஸ்ட்லுக்கை வெளியிட்டு விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க திட்டமிட்டிருந்தது படக்குழு.

இந்த படத்தின் தகவல்கள் வெளியான காலத்தில் இருந்தே இந்த படத்தை ‘விஜய் 62, தளபதி 62’ என்று தான் ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். விஜய் மற்றும் ஏ ஆர் முருகதாஸ் கூட்டணியில் ஏற்கன்வே உருவான துப்பாக்கி,கத்தி ஆகிய இரண்டு படங்களும் மாபெரும் ஹிட் அடைந்தது. அதிலும் குறிப்பாக அந்த படத்தின் டைட்டில்கள் விஜய் ரசிகர்கள் மிகவும் கவர்ந் ததால். படம் வெளியாவதற்கு முன்பாகவே அந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்தது.

thalabathy 62

vijay 62

இந்நிலையில் விஜய் 62 படத்தின் ஃபஸ்ட்லுக்கை மற்றும் டைட்டிலை இன்று மாலை வெளியிட உள்ளது. ஆனால், அதற்குள்ளாக ரசிகர் ஒருவர் இணையதளத்தில் போஸ்டர் ஒன்றை தயார் செய்து இந்த படத்திற்கு ‘வேற லெவல் ‘ என்ற பெயரிட்டு பரப்பி வருகிறார். ஆனால், இது அதிகார பூர்வ டைட்டில் இல்லை அதனால் இது போன்ற தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என்று அந்த ரசிகரை வலைதள வாசிகள் திட்டி தீர்த்து வருகின்றனர்.