சர்கார் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அட்லியின் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். பெயரிடப்படாத இந்த புதிய படத்தை ரசிகர்கள் விஜய் 63 என்று அழைத்து வருகின்றனர். இப்படத்தில் நயன்தாரா, கதிர் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். மேலும், இப்படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடிக்கவுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பல்வேறு இடங்களில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நடிகர் விஜய் ஒரு கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார் என்றும், மேலும், இந்த படம் பெண்கள் கால்பந்து போட்டியை மையமாக கொண்ட கதையாக இருக்கும் என்றும் ஏற்கனவே பல தகவல்கள் வெளியாகின.
அதே போல இந்தி நடிகர் ஷாருக் காணும் நடிக்கிறார் என்ற சில செய்திகள் வெளியாகின. ஆனால், அந்த தகவலை பட குழுவினர் மறுத்துள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகளுக்காக அமைப்பாட்டிற்கும் செட்டின் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
பட வேலைகள் ஒருபக்கம், வியாபாரம் என பிஸியாக படக்குழுவினர் உள்ளனர். இந்த பிஸியில் ஃபஸ்ட் லுக் பற்றி மறந்துவிட்டார்களா என்று தெரியவில்லை. இந்த நிலையில் விஜய் பிறந்தநாளுக்கு பதிலாக முன்கூட்டியே இப்பட ஃபஸ்ட் லுக்கை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளார்கள்.