விஜய் 63 படத்தின் கதாநாயகி இவர் தான்..!AGS நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

0
752
Vijay63

விஜய்யின் 63-வது படத்தை இயக்கவிருக்கிறார் அட்லீ, ‘தெறி’, ‘மெர்சல்’ படங்களுக்குப் பிறகு மீண்டும் நடிகர் விஜய்யுடன் இணைகிறார் அட்லீ.விஜய் மற்றும் அட்லீ கூட்டணியில் உருவாகவுள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் துவங்க உள்ளது என்று தகவல் வெளியான நிலையில் இந்த படத்தின் பூஜை கடந்த செவ்வாய் கிழமை (நவம்பர் 13) நடைபெற்றது. இந்நிலையில் இந்த படத்தை பற்றிய அதிகராபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஏ ஜி எஸ் நிறுவனம்.

சமீபத்தில் ஏ ஜி எஸ் நிறுவனத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியான தகவலின்படி இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கதாநாயகியாக கமிட் ஆகியுள்ளார். வில்லு படத்தை தொடர்ந்து தற்போது விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார் நயன்தாரா.

இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கவுள்ளார்,மேலும்,நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகர் விவேக் விஜய்யின் இந்த படத்தில் நடிக்க உள்ளார். மேலும், படத்தில் அனல் அரசு சண்டை காட்சிகளை அமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.