நடிகர் விஜய் தற்போது அட்லியின் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நயன்தாரா, கதிர் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். மேலும், இப்படத்தில் வில்லனாக இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பல்வேறு இடங்களில் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் நடிகர் விஜய் ஒரு கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார் என்றும், மேலும், இந்த படம் பெண்கள் கால்பந்து போட்டியை மையமாக கொண்ட கதையாக இருக்கும் என்றும் ஏற்கனவே பல தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட விஜய் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.
இதையும் படியுங்க : விஜய் படத்தில் எனக்கு உடன் பாடே இல்லை.! அப்போதே ஓப்பனாக பேசியுள்ள மகேந்திரன்.
தமிழ் நடிகர்களில் விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை வைத்திருப்பது விஜய் மட்டும் தான். இந்த காரை விஜய் பெரும்பாலும் படப்பிடிப்பிற்கு செல்ல பயன்படுத்துவது இல்லை. ஆனால் , சமீபத்தில் விஜய் 63 படப்பிடிப்பிற்கு இந்த காரில் சென்றுள்ளார் விஜய்