விஜய் பிறந்தநாளில் வெளியான விஜய் 65 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு.

0
1540
vijay 65
- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தளபதி விஜய். இன்று விஜய்யின் 45 ஆவது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகிறார்கள். கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அணைத்து விதமான படப்பிடிகள், தியேட்டராகள் மூடப்பட்டு உள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘மாஸ்டர்’ படம் ரிலீஸ் தேதிக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா பிரச்சனை முழுவதுமாக முடிந்து மக்கள் வாழ்கை இயல்பு நிலைக்குத் திரும்பி பிறகு தான் உலகம் முழுவதும் திரையரங்கம் திறக்கும். அதற்கு பிறகு தான் இப்படம் ரிலீஸ் செய்யப்படும் என்று கோலிவுட் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விஜய்யின் அடுத்த படம் குறித்து பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த படத்தை யார் இயக்க போகிறார்கள் என்று பல முன்னணி இயக்குனர்களின் பெயர்கள் அடிப்பட்டன.

- Advertisement -

இதுவரை விஜய்யை வைத்து மூன்று படங்கள் இயக்கிய முருகதாஸின் பெயரும் லிஸ்ட்டில் இருந்தாக சொல்லப்படுகிறது. விஜய்யின் படத்திற்கு இயக்குனர் யாராக இருந்தாலும் படத்தின் இசையமைப்பாளர் எஸ். எஸ்.தமன் தான் என்று பலரும் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் இன்று விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இசையமைப்பாளர் தமன் டீவ்ட் போட்டு உள்ளார். அதில் அவர் கூறியது, நான் “தளபதி 65” படத்தில் இசையமைப்பாளராக பணிபுரிகிறேன் என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், விஜய்யின் மெர்சல் படத்தின் போதே இசையமைப்பாளர் தமனும், விஜய்யும் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், அது நடைபெறாமல் போனது. தற்போது இந்த வதந்தி உண்மையாகியுள்ளது. எஸ்.எஸ். தமன் அவர்க்ள தெலுங்கு திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர். கடைசியாக அவர் அலா வைகுந்தபுரமலோ படத்திற்கு இசையமைத்து இருந்தார். அந்த படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது

-விளம்பரம்-
Advertisement