சந்திராயன் தோல்வியை கிண்டல் செய்த பாகிஸ்தான்.! ஒன்றிணைந்து தல தளபதி ரசிகர்கள் தெறிக்கவிவிட்ட மீம்ஸ்.!

0
7509
vijay-ajith

இந்தியா ஏவப்பட்ட சந்திராயன்-2 விண்கலம் குறித்து டுவிட்டரில் கலாய்த்து வந்த பாகிஸ்தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையை சார்ந்த அமைச்சர் ஃபவாத் ஹுசைன் செளத்திரியை இந்திய நெட்டிசன்கள் புரட்டி போட்டு தெறிக்க விட்டனர். பாகிஸ்தான் அமைச்சர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்தியா சந்திராயன்-2 மூலம் பின்னடைவு அடைந்துள்ளது என்று கிண்டல் செய்துள்ளார்.

Image

சில மாதங்களுக்கு முன்னர் நிலவைப் பற்றி ஆராய்ச்சி செய்ய பெங்களூரில் உள்ள இஸ்ரோ விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்பட்ட சந்திராயன்-2 விண்கலம் நிலவில் தரையிறங்கும் சில நொடிகளில் சிக்னல்கல் துண்டிக்கப்பட்டதை தொடர்ந்து இந்திய விஞ்ஞானிகள் வருத்தத்தில் உள்ளனர். இதனால் இஸ்ரோவுக்கு வந்த பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், தலைவர் சிவனுக்கும் ஆறுதலையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

- Advertisement -

இதையும் பாருங்க : இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர்.! இறுதியாக ரகசிய அறையை பயன்படுத்திய பிக் பாஸ்.! லேட்டஸ்ட் அப்டேட்.!

இந்த வேளையில் பாகிஸ்தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஃபவாத் ஹுசைன் செளத்திரி இந்த நிகழ்வு குறித்து ட்விட்டர் பக்கத்தில் , இந்தியா பின்னாடி சென்று விட்டது என்று கிண்டலும், கேலியும் செய்து விதமாக பதிவு செய்திருந்தார்.உடனே பாகிஸ்தான் அமைச்சரின் கருத்துக்கு எதிராக நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வந்தனர். அதற்கு அவர் கூறியது , இந்தியர்கள் என் மீது கோபப்படுவதை பார்த்தால் நான் என்னவோ!! நிலவுக்கு சென்ற விண்கலத்தை தடுத்து நிறுத்தியது போல இருக்கிறதே என்று மேலும் கிண்டல் செய்தார். அதுமட்டுமில்லாமல் அவர் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மோடி ஆறுதல் சொல்லும் புகைப்படத்தை பார்த்து, மோடி என்ன அறிவியல் விஞ்ஞானி போல் “சாட்டிலைட்” பற்றி எல்லாம் பேசுகிறார். இவர் அரசியல்வாதியா? இல்ல, அறிவியல் விஞ்ஞானியா ? என்று நக்கல் அடித்தார்.

-விளம்பரம்-
Image

மேலும் மோடி இந்த மெஷின் மூலம் இந்தியா ஏழை நாட்டின் 900 கோடி ரூபாய் வீணாக்கி உள்ளார் என்றும் குறிப்பிட்டிருந்தார். இறுதியாக அவர் பதிவு செய்த ட்விட்டரில் சேட்டிலைட் என்ற வார்த்தைக்கு தவறாக எழுதி பதிவு செய்யப்பட்டிருந்தது. இதை அறிந்த இந்திய நெட்டிசன்கள் பாகிஸ்தான் அமைச்சரை வறுத்து எடுத்து ‘கிழி, கிழி’என்று கிழித்தனர். அது மட்டுமில்லாமல் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் வேறு லெவலுக்கு சென்றுள்ளனர்.

Image

பாகிஸ்தானுக்கு எதிரான பதிலடியில் தற்போது அஜித், விஜய் ரசிகர்களும் ஒன்றிணைந்துவிட்டனர். #PakistanTheSlaveOfIndia என்ற ஹேஷ்டேக்கை அஜித் ரசிகர்களும், #WorthlessPakistan என விஜய் ரசிகர்களும் ஹேஷ்டேக்க உருவாக்கி அதனை டிரெண்டாக்கி வருகின்றனர். என்னதான் தங்களுக்குள் கருத்துவேறுபாடு இருந்தாலும் நாட்டிற்கு ஒரு இழுக்கு என்றால் அஜித், விஜய் ரசிகள் கைகோர்த்து எதிர்ப்புக்குரல் விடுத்து வருவது பெருமைக்குரியதே.

Image
Image

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement