விஜய் படத்தில் நடிக்க மறுத்த பிரபல முன்னணி நடிகை! காரணம் இதுதான்.! யார்

0
585
vijay

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கி வரும் “சர்கார் ” படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை அடுத்து இயக்குனர் அட்லீ இயக்கவுள்ள படத்தில் நடிகர் விஜய் நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தது. ஏற்கனவே இவர்கள் இருவர் கூட்டணியில் வெளியான “தெறி” மற்றும் “மெர்சல் ” ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

vijay actor

மேலும், விஜய்யின் 63 வது படமான இந்த படத்தை முதன் முறையாக ஏஜிஎஸ் கல்பாத்தி நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் , இந்த படத்தின் படபிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் துவங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷை கமிட் செய்ய இருந்தார்களாம்.

ஆனால், மற்ற படங்களில் பிஸியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷிற்கு கால் ஷீட் இல்லாததால் இந்த படத்திற்கு நோ சொல்லி இருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஒருவேளை இந்த படத்தில் நடிக்க நடிகை கீர்த்தி சுரேஷ் கமிட் ஆகி இருந்தால், அது அவருக்கு தளபதியுடன் மூன்றாவது படமாக அது அமைந்திற்கும்.

Actress keerthi suresh

ஏற்கனவே, நடிகர் விஜய்யுடன் ‘பைரவா’ படத்தில் நடித்த நடிகை கீர்த்தி சுரேஷ், தற்போது மீண்டும் நடிகர் விஜய்யுடன் ‘சர்கார்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது. அது போக ‘சாமி 2’, ‘சண்டகோழி 2 ‘ என்று வரிசையாக இவரது படங்கள் வெளியாக இருக்கின்றனர்.