விக்ராந்த் இல்ல, விஜயுடன் இருக்கும் இந்த நடிகர் யார் தெரியுதா ? அப்பவே இப்படியா ?

0
1665
Vijay
- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வரும் நடிகர் விஜய், அவரது அப்பா சந்திரசேகர் மூலமாக திரையுலகிற்கு வந்தாலும் தனது தனிப்பட்ட திறமையால் இன்று ஒரு உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். விஜய்யை பொறுத்த வரை அவர் படப்பிடிப்பில் மிகவும் அமைதியாக இருப்பார். யாருடன் அவ்வளவாக பேச மாட்டார் என்று தான் அவருடன் பணியாற்றியவர்கள் கூறுவார்கள். ஆனால், விஜயின் மறுபக்கத்தை அறிந்திருப்பது அவர்களது நண்பர்கள் மட்டும் தான்.

-விளம்பரம்-

விஜய் நண்பர்கள் குறித்து அவரது தாய் கூறுவது என்னவென்றால். விஜய் நண்பர்கள் சஞ்சீவ், ஸ்ரீசாந்த்,மனோஜ்,ராம்குமார். அவர்களுடன் சேர்த்து விஜய் ஐந்து பேர். இதில் சஞ்சீவ் விஜய் நெருங்கிய நண்பர்கள் சஞ்சீவ் மட்டுமில்லாமல் அவர் குடும்பத்தாரும் விஜய்யுடன் மிகவும் நெருக்கமானவர்கள். நடிகர் சஞ்சீவ் 1989 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான பொன்மனச் செல்வன் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார்.

- Advertisement -

அதன்பின்னர் சந்திரலேகா, நிலாவே வா, பத்ரி போன்ற பல்வேறு படங்களில் துணை நடிகராக நடித்து இருந்தார். நீண்ட வருடங்களுக்கு பின்னர் விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்திருக்கிறார் சஞ்சீவ். மேலும், சினிமா மட்டுமல்லாது சின்னத்திரையிலும் பிரபலம் தான். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியல் மூலம் தான் சஞ்சீவ் சின்னத்திரைக்கு அறிமுகமானார். அதன் பின்னர் இவர் பல்வேறு தொடர்களில் நடித்து இருக்கிறார்.

சஞ்சீவ் குறித்த தகவல்:

அதிலும் குறிப்பாக 2007 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் தொடரில் இவர் ஹீரோவாக நடித்து இருந்தார். இந்த சீரியல் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தார். மேலும், இந்த சீரியல் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி இருந்தது. அதனை தொடர்ந்து இவர் ஏகப்பட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் நடிப்பது மட்டுமில்லாமல் தொகுப்பாளராக டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சஞ்சீவ்:

குறிப்பாக, கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மாநாடு மயிலாடு நிகழ்ச்சியை சஞ்சீவ் தான் தொகுத்து வழங்கி இருந்தார். மேலும், இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு பின் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் சஞ்சீவ் புதிய தொடர் ஒன்றில் கமிட் ஆனார்.

நீக்கப்பட்ட சஞ்சீவ் :

ராதிகா சரத்குமார் தயாரிக்கும் கிழக்கு வாசல் என்ற சீரியலில் நடிக்க சஞ்சீவ் ஒப்பந்தமானார். இந்த சீரியலில் ரேஷ்மா, ஏ எஸ் சந்திரசேகர் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஆனால், ஒளிபரப்பாகும் முன்பே சஞ்சீவ் நீக்கப்பட்டார். சீரியலில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்துசஞ்சீவ் கூறுகையில் இந்த சீரியலின் பூஜையில் கலந்து கொண்டது உண்மைதான். ஷூட்டிங் தொடங்கி சில காட்சிகளில் நடிக்கவும் செய்தேன். ஆனால், இப்போது நான் இந்த சீரியலில் இல்லை. நீங்க இந்த சீரியலில் பண்ணவில்லை என்று என்னிடம் சொல்லிவிட்டார்கள். ஆனால், அதற்கான காரணத்தை நான் இப்போது மீடியா முன்பு விளக்கமாக பேச விரும்பவில்லை

Advertisement