விஜய்க்கு மட்டும் இல்ல இவங்களுக்கு என் ஆதரவு – பிரஸ் மீட்டில் விஜய் ஆண்டனி சொன்ன தகவல்

0
87
- Advertisement -

விஜயின் அரசியல் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் ஆண்டனி கொடுத்திருக்கும் பதில் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இசையமைப்பாளராக இருந்து நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது இவர் நடிப்பில் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ரோமியோ.

-விளம்பரம்-

இந்த படத்தில் மிர்னாலினி ரவி, யோகி பாபு, விடிவி கணேஷ், இளவரசு, சுதா, ஸ்ரீஜா ரவி, தலைவாசல் விஜய் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த உட்பட ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு ஏப்ரல் 11ம் தேதியான இன்று வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே இந்த படத்தினுடைய பர்ஸ்ட் லுக் போஸ்டர், பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு ரோமியோ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்று இருக்கிறது.

- Advertisement -

பத்திரிக்கையாளர் சந்திப்பில் விஜய் ஆண்டனி:

அப்போது விஜய்யின் அரசியல் குறித்து விஜய் ஆண்டனியிடம் கேள்வி கேட்டிருந்தார்கள். அதற்கு விஜய் ஆண்டனி, விஜய் 17 வயதிலிருந்தே சினிமாவில் இருக்கிறார். இதனால் அவர் உச்சத்தில் இருக்கிறார். நமக்கு அன்பை கொடுத்து மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று அவருக்கு தோன்றியிருக்கும். அதனால் அவர் சினிமாவை விட்டுப் போகிறார் என்று நினைக்கிறேன். மக்களுக்கு ஏதாவது செய்யணும் என்று விஜய் நினைக்கிறார் செய்யட்டும், பார்க்கலாம் என்று கூறினார்.

-விளம்பரம்-

விஜய் அரசியல் குறித்து சொன்னது:

அதன் பின் நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா? என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு விஜய் ஆண்டனி, நீங்களும் வரலாம், யார் வேண்டுமானாலும் வரலாம். இப்போதைக்கு நடிப்பில் தான் கவனம். வருங்காலத்தில் சினிமாவில் நிறைய செய்து விட்டோம் மக்களுக்கு ஏதாவது செய்யலாமே என நினைக்கும் போது எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் ஒரு வேலை வரலாம் என்று கூறி இருக்கிறார். பின் விஜய்யின் அரசியல் வாழ்க்கைக்கு நீங்கள் ஆதரவு தருவீர்களா? என்று கேட்டதற்கு விஜய் ஆண்டனி, நான் திருமாவளவன் சார், ஸ்டாலின் சார், விஜய் என அனைவருக்குமே ஆதரவு தருகிறேன்.

அரசியல் குறித்த அறிவுரை:

அதேபோல் ஓட்டுக்கு பணம் தருவது தவிர்க்கனும். ஒருவேளை அடுத்த உணவுக்கு வழியில்லை, பசங்களுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்ட முடியவில்லை என்றால் பணம் வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால், பணம் கொடுத்தவருக்கு ஓட்டு போட வேண்டும் என்று நினைக்காதீர்கள். நல்லவருக்கு ஓட்டு போடுங்கள். உங்கள் பணத்தை திரும்பிக் கொடுக்கிறார்கள். அதை வாங்கிக் கொண்டு சரியான நபருக்கு ஓட்டு போடுங்கள். ஆனால், அதற்கு நேர்மையாக இருக்கத் தேவையில்லை. கஷ்டப்படும் குடும்பங்கள் வாங்கிக் கொள்ளுங்கள். அது உங்கள் பணம் தான். ஆனால், வாங்கிவிட்டு சரியான நபருக்கு மனசாட்சி படி வாக்களியுங்கள் என்று பேசி இருக்கிறார்.

விஜய் அரசியல்:

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் விஜய். கடைசியாக விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் வெளியாகியிருந்த லியோ படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்திருந்தது. தற்போது விஜய் அவர்கள் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். இதை அடுத்து இவர் தளபதி 69 என்ற படத்தில் மட்டும் தான் நடிக்க இருக்கிறார். அதற்குப்பின் இவர் முழுவதுமாக அரசியலில் களமிறங்க இருக்கிறார். தற்போது இவர் தன்னுடைய கட்சிக்கு தமிழக வெற்றிக்கழகம் என்று பெயர் வைத்திருந்தார். 2026 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்சியின் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் விஜய்

Advertisement