சிக்னலை மதிக்காமல் சென்ற விஜய்யின் கார். வைரலான வீடியோ. அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்.

0
1740
- Advertisement -

போக்குவரத்து சிக்னலை விஜய் மீறிவிட்டார் என்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முடி சூடாக மன்னனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு கோடிக்கணக்கான பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். இவருக்கு விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் ரசிகர் மன்றம் வைத்து இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

-விளம்பரம்-

இப்படி இருக்கும் நிலையில் 2020 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள். இந்த வெற்றி அரசியல் வட்டாரத்தை கதிகலங்க வைத்தது. இப்படி விஜய் மக்கள் இயக்கம் அரசியலில் ஈடுபட்டாலும், தங்களின் ஜனநாயக கடமையை செய்வதில் தவறுவதில்லை. மேலும், விஜய் சினிமாவை தாண்டி பொதுநல சேவைகளையும் செய்து கொண்டு வருகிறார். இதனால் இவர் கூடிய விரைவில் அரசியலுக்கு வருவார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

விஜய் மக்கள் இயக்கம்:

அந்த வகையில் இவர் சமீபத்தில் தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் பத்தாம் மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்களில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை நடிகர் விஜய் நேரில் சந்தித்து வழங்கி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் சில மாணவர்கள் வைத்த கோரிக்கைகளை விஜய் அவற்றை மேடையிலேயே நிறைவேற்றி இருக்கிறார். கிட்டத்தட்ட 12 மணி நேரத்திற்கு மேலாக இந்த விழா நடைபெற்றிருக்கிறது.

இந்த விழாவில் விஜய் அவர்கள் மாணவர்களின் எதிர்காலம், கல்வி, அரசியல், தலைவர்கள் குறித்தும் பல விஷயங்களை பேசி இருந்தார்.மாணவர்களுக்கு விஜய் பரிசு வழங்கியது குறித்து பலருமே பாராட்டி இருந்தார்கள். இந்த நிகழ்வின் மூலம் விஜய் அரசியலுக்கு வருவதற்காக தான் செய்கிறார் என்றெல்லாம் பல தரப்பினர் மத்தியில் கருத்துக்கள் வந்தது. பனையூர் இல்லத்தில் மாவட்ட பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் அவர்கள் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொண்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

சிக்னலை மதிக்காத கார் :

இந்த கூட்டத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக தொகுதி வாரியாக மக்கள் இயக்கத்தை பலப்படுத்தவது குறித்து ஆலோசனை நடத்தி இருப்பது தகவல் வெளியாகி இருந்தது. விஜய்யின் வருகையை அறிந்து கொண்ட ரசிகர்களும் பத்திரிகையாளர்களும் அவரது காரை முன்னும் பின்னும் துரத்தி வந்தனர். இந்த நிலையில் சாலை ஒன்றின் சந்திப்பில் சிவப்பு நிற சிக்னல் போட்டு வாகனத்தை நிறுத்த அறிவுறுத்தப்பட்டு இருந்தது. ஆனால் அதனை மதிக்காத விஜயின் கார் அதனை வேகமாக கடந்து சென்றது.

விஜய் பேசியது என்ன :

இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படி ஒரு நிலையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக விஜய் வந்த அந்த காருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் தற்போது சமூக வலைதளத்தில் பேசுபொருளாகி இருக்கிறது.

Advertisement