அத்தனை சொகுசு கார்கள் இருந்தும் நெளிந்து போன காரில் வந்த விஜய் – காரணம் என்ன தெரியுமா ? இந்த கார் யாருடையது தெரியுமா ?

0
2968
Vijay
- Advertisement -

மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திக்க நெளிந்து போன காரில் விஜய் சென்றிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முடி சூடாக மன்னனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு கோடிக்கணக்கான பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். இவருக்கு விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் ரசிகர் மன்றம் வைத்து இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

-விளம்பரம்-

இப்படி இருக்கும் நிலையில் 2020 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள். இந்த வெற்றி அரசியல் வட்டாரத்தை கதிகலங்க வைத்தது. இப்படி விஜய் மக்கள் இயக்கம் அரசியலில் ஈடுபட்டாலும், தங்களின் ஜனநாயக கடமையை செய்வதில் தவறுவதில்லை. மேலும், விஜய் சினிமாவை தாண்டி பொதுநல சேவைகளையும் செய்து கொண்டு வருகிறார். இதனால் இவர் கூடிய விரைவில் அரசியலுக்கு வருவார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

விஜய் மக்கள் இயக்கம்:

மேலும், இவர் சமீபத்தில் தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் பத்தாம் மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்களில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை நடிகர் விஜய் நேரில் சந்தித்து வழங்கி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் சில மாணவர்கள் வைத்த கோரிக்கைகளை விஜய் அவற்றை மேடையிலேயே நிறைவேற்றி இருக்கிறார். கிட்டத்தட்ட 12 மணி நேரத்திற்கு மேலாக இந்த விழா நடைபெற்றிருக்கிறது.

விஜய் நடத்திய விழா:

இந்த விழாவில் விஜய் அவர்கள் மாணவர்களின் எதிர்காலம், கல்வி, அரசியல், தலைவர்கள் குறித்தும் பல விஷயங்களை பேசி இருக்கிறார். மாணவர்களுக்கு விஜய் பரிசு வழங்கியது குறித்து பலருமே பாராட்டி இருந்தார்கள். இந்த நிகழ்வின் மூலம் விஜய் அரசியலுக்கு வருவதற்காக தான் செய்கிறார் என்றெல்லாம் பல தரப்பினர் மத்தியில் கருத்துக்கள் வந்தது. அதுமட்டுமில்லாமல் 2026 ஆம் ஆண்டு நடக்கும் சட்டப்பேரவை தேர்தலில் விஜய் கவனம் செலுத்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், மாணவர்கள் விருது வாங்கும் நிகழ்வில் விஜய் அவர்கள் முழுக்க முழுக்க மாணவர்களுடன் மட்டும் தான் நேரத்தை செலவிட்டிருந்தார். இதனால் விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகளுடன் இவரால் பேச முடியவில்லை. இந்த நிலையில் இன்று விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள நிர்வாகிகளை சந்தித்து பேச ஆலோசனை கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார். இன்று மதியம் இந்த கூட்டம் பனையூர் தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதில் விஜய் அவர்கள் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து ஃபோட்டோவும் எடுத்துக் கொண்டிருந்தார்.

கார் குறித்த தகவல் :

இந்த நிலையில், விஜய் அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வந்த கார் குறித்த தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, இன்று நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு விஜய் அவர்கள் பழமையான கார் ஒன்றில் வந்திருந்தார். அந்த கார் ஆங்காங்கே நெளிந்து போயிருக்கிறது. கிட்டத்தட்ட இந்த கார் வாங்கி ஏழு வருடங்களுக்கு மேல் ஆகிறது. அதுமட்டுமில்லாமல், இந்த கார் விஜய் அவர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான கார். அதனால் தான் விஜய் அவர்கள் இந்த காரை எங்கு சென்றாலும் பயன்படுத்துகிறார். குறிப்பாக, இவரின் அரசியலுக்கு இந்த கார் அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க சாலை ஒன்றின் சந்திப்பில் சிவப்பு நிற சிக்னல் போட்டு வாகனத்தை நிறுத்த அறிவுறுத்தப்பட்டு இருந்தது. ஆனால் அதனை மதிக்காத விஜயின் கார் அதனை வேகமாக கடந்து சென்றது. இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படி ஒரு நிலையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக விஜய் வந்த அந்த காருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் தற்போது சமூக வலைதளத்தில் பேசுபொருளாகி இருக்கிறது.

Advertisement