நன்றி மறவாத தளபதி இரவோடு இரவாக கேப்டன் இறப்பிற்கு ஓடோடி வந்து கலங்கி நின்ற தருணம் – இதோ வீடியோ.

0
474
- Advertisement -

கேப்டன் விஜயகாந்த் உடலைக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தி இருக்கிறார் விஜய். கடந்த சில வருடங்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்த கேப்டன் கடந்த 28 ஆம் தேதி மூச்சு விடுதலில் பிரச்சனை ஏற்பட்டு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலுக்கு பல்வேறு பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் கேப்டன் உருவாக்கிய தளபதி விஜய் நேரில் வந்து அவரது உடலுக்கு மரியாதை செலுத்தி இருக்கிறார்.

-விளம்பரம்-

விஜய்க்கும் விஜயகாந்திற்கு ஒரு மிகப்பெரிய பந்தம் இருக்கிறது. விஜயகாந்த்-எஸ்ஏசி இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட காரணம் 1980களில் எஸ்ஏ சந்திரசேகர் இயக்குனராக வேண்டும் என்றும், விஜயகாந்த் ஹீரோவாக வேண்டும் என்றும் கோடம்பாக்கத்தில் உள்ள பல கம்பெனிகளில் ஏறி இறங்கி இருந்தார்கள். அப்போதுதான் இவர்கள் இருவரும் சந்தித்து பேசிக் கொண்டார்கள். அதன்பிறகு தான் சட்டம் ஒரு இருட்டறை என்ற படம் உருவானது.

- Advertisement -

இந்த படம் தமிழ் மொழியில் மட்டும் இல்லாத இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளில் ரீமிக்ஸ் செய்யப்பட்டு வெளியாகி வெற்றியும் பெற்றது. இந்த படம் வெற்றி அடைந்தது அடுத்து இன்று வரைக்கும் எஸ்ஏசி தான் எங்க டைரக்டர் என்று விஜயகாந்த் சொல்லுவாராம். அந்த அளவிற்கு இவர்கள் நட்பு இருந்தது. இவர்கள் இணைந்து 15 வருடங்களுக்கும் மேலாகவும் பணியாற்றியிருந்தார்கள்.

இவர்களுடைய கூட்டணியில் வெளிவந்த வெற்றி, குடும்பம், வசந்த ராகம், சட்டம் ஒரு விளையாட்டு போன்ற படங்கள் எல்லாம் வெளியாகியிருந்தது. இந்த படங்களிலும் விஜய் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்திருந்தார். அதற்குப் பிறகு விஜய் வைத்து எஸ் ஏ சி இயக்கிய முதல் படம் நாளைய தீர்ப்பு. இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. அதற்குப் பிறகு விஜய்யும் விஜயகாந்த்தையும் வைத்து ஒரு படம் இயக்க முடிவு செய்தார் எஸ்ஏசி.

-விளம்பரம்-

அப்போது விஜயகாந்த் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்தார். இதனால் தன்னுடைய மகனுடைய எதிர்காலமும் மாறும் என்று நினைத்து இயக்குனர் எஸ்ஏசி கேட்டவுடனே விஜயகாந்த் ஒத்துக்கொண்டார்.அதற்குப் பிறகுதான் செந்தூரப்பாண்டி படம் உருவானது. அந்த படம் நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. எஸ்ஏசி நினைத்தது போலவே விஜய்க்கு ஒரு பெரிய ரீச்சை இந்த படம் பெற்றுத் தந்தது. விஜயகாந்திற்கு தம்பியாக விஜய் நடித்ததன் மூலமாக விஜய்க்கு ரசிகர்கள் அறிமுகமானர்கள். இதைப் பேட்டியிலேயே விஜய் ஒருமுறை கூறியிருக்கிறார்.

என்னை மாஸ் ஆடியன்ஸ் நடிகராக ஏற்றுக் கொண்டதற்கு முக்கிய காரணம் விஜயகாந்த் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார். அன்றிலிருந்து இன்று வரை விஜய் விசுவாசத்தோடு தான் விஜயகாந்துக்கு இருக்கிறார். அந்த வெளிப்பாடாகத்தான் லியோ வெற்றி விழாவில் கமல், ரஜினி பெயர்களை சொல்வதற்கு முன்பாக விஜயகாந்தின் பெயரை சொல்லிருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்தபோது சங்கத்திற்காக அவர் நடத்திய கலை நிகழ்ச்சிகள் எல்லாம் விஜய் தன்னுடைய ஆதரவை கொடுத்திருந்தார்.அதோடு விஜயகாந்தின் பிறந்த நாள் ஆகஸ்ட் 25ஆம் தேதி தான் விஜய்க்கும் திருமணம் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement