விஜய் தேவர்கொண்டாவிற்கு கிடைத்த புதிய கௌரவம்.! டாப் 30 இடம்பிடித்த ஒரு இந்திய நடிகர்.!

0
822
- Advertisement -

பிரபல பத்திரிகை நிறுவனமானன போர்ப்ஸ் ஆண்டு தோறும் பல்வேறு துறைகளில் சாதிக்கும் மணர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டின் இளம் இந்திய சாதனையாளர் பட்டியலில் விஜய் தேவரகொண்டா பெயர் இடம்பெற்றுள்ளது. ‘ரவுடி’ என்று செல்லமாக அழைக்கப்படும் டோலிவுட் நடிகர் விஜய் தேவரகொண்டா, `பெல்லி சூப்புலு’, `அர்ஜுன் ரெட்டி’, `கீதா கோவிந்தம்’, `டாக்ஸிவாலா’ உள்ளிட்ட தெலுங்குப் படங்கள் மூலம் தமிழிலும் ரசிகர்களைப் பெற்றவர். 

-விளம்பரம்-

விஜய் தேவரகொண்டா. ‘நோட்டா’  படம் மூலம் தமிழ்ப் படங்களிலும் நேரடியாக நடிக்கத் தொடங்கியுள்ளார். தன் ‘டோன்ட் கேர் ஆட்டிட்யூட்’ பேச்சு, நடை, பழகும் விதம் என அனைவரையும் கவர்ந்த இவர், நோட்டா படம் வெற்றி பெறாததுக்கு கதாநாயகனான தானே காரணம் என்று கூறி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

- Advertisement -

இதையும் படியுங்க : விஜய் தேவர்க்கொண்டவுடன் விஷாலின் காதலி.!வைரலாகும் புகைப்படம்.! 

தற்போது,  பிரபல ஆங்கில பத்திரிகை ‘ஃபோர்ப்ஸ்’ வெளியிட்டுள்ள இந்திய சாதனை இளைஞர்கள் பட்டியலான  `30 அண்டர் 30’யில் இடம்பெற்றுள்ளார். இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய நடிகர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற ஆண்டு அதிக சம்பளம் பெறும் இந்திய பிரபலங்கள் பட்டியலில் 72-ம் இடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

-விளம்பரம்-

இது குறித்து நெகிழ்ந்த விஜய் தேவரகொண்டா  “25 வயதில் ஆந்திரா வங்கில 500 ரூபாய் இல்லனா அக்கவுண்ட் கிளோஸ் ஆகிடும். அதனால 30 வயசுக்குள்ள செட்டிலாகிடுனு அப்பா சொல்லுவார். பெத்தவங்க ஆரோக்யமா இருக்கும்போது இதெல்லாம் பண்ணாதான் பின்னாடி சந்தோஷமா இருக்க முடியும்னு சொன்னார். 4 வருஷம் கழிச்சு ஃபோர்ப்ஸ் பத்திரிகையில் நான் 30 அண்டர் 30ல இருக்கேன்’ என்று ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.  

Advertisement