ஹெலிகப்டர்….வெள்ளை சட்டை..தமிழக அரசியல்வாதிகளை கிழித்து தொங்கவிட்ட விஜய் தேவர்கொண்டா..!

0
378
vijay

தெலுங்கில் கடந்த ஆண்டு வெளியான “அர்ஜுன் ரெட்டி ” என்ற படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் முழுக்க பரிட்சியமானவர் நடிகர் விஜய் தேவர்கொண்டா. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான “கீதா கோவிந்தம் ” என்ற படமும் தெலுங்கில் வசூல் சாதனை படைத்து.

Nota-Movie-Posters

அதே போல “கீதா கோவிந்தம் ” படத்தில் இருந்து வெளியான “இன்கேம் இன்கேம் காவாளி ” என்ற பாடல் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது நடிகர் விஜய் தேவர்கொண்டா இயக்குனர் ஆனந்த் சங்கர் என்பவர் இயக்கத்தால் “நோட்டா” என்ற நேரடி தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.

அரசியலில் நடந்து வரும் ஊழல் மற்றும் இளைஞர்கள் அரசியலை மையமாக எடுக்கப்பட்டுள்ளது என்று சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீஸர் மூலம் நன்றாக தெரியவந்தது. இந்நிலையில் இந்த படத்தின் புரோமோசன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய நடிகர் விஜய் தேவர்கொண்டா, தமிழக அரசியல் குறித்து கேலி செய்யும் வகையில் பேசியுள்ளார்.

vijay devarkonda

இந்த விழாவில் பேசியுள்ள நடிகர் விஜய் தேவேற்கொண்டா, தமிழகத்தில் ஏன் ஹெலிகாப்டர் மேலே போகும் போது கீழே குனிஞ்சு நிற்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கவே மிகவும் காமெடியாக உள்ளது. அதே போல சில அரசியல் வாதிகள் தங்களது வெள்ளை சட்டை பாக்கெட்டில் வெளியே தெரியும்படி(தலைவர்) புகைப்படம் வைப்பது போன்ற விடயங்களை நான் கேள்விப்பட்டுள்ளேன். இது போன்ற காட்சிகள் எல்லாம் “நோட்டா படத்திலும் இடம்பெற்றுள்ளது என்று கூறியுள்ளார்.