பேனர்களை கிழித்த அதிமுகவினர்..!விஜய் ரசிகர்கள் செய்த அசத்தலான செயல்..!

0
562
Sarkar

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் சர்கார் திரைப்படம், இலவசங்களுக்கு எதிராகக் கடுமையான வசனங்களை முன்வைக்கிறது. எனவே அந்த படத்தை திரையிட முழுவதுமாக தடைவிதிக்க கோரி அதிமுகவினர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

சர்ச்சைகுறிய காட்ச்சிகளை நீக்க வேண்டும் என்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள திரையரங்குகளை முற்றுகையிட்ட அதிமுகவினர் சர்கார் படத்திற்கு ரசிகர்கள் வாய்த்த பேனர்களை கிழித்தனர். இதனால் விஜய் ரசிகர்கள் சிலர் கண்டித்து வீடியோகளை பதிவிட்டனர்.

ஆனால், ரசிகர் ஒருவர் மிகவும் பொறுமையுடன் அதிமுகவினர் கிழித்த பேனரை வீதி ஓரத்தில் இருக்கும் கடைகளுக்கும், ஏழை மக்களுக்கும் கொடுத்து உதவி செய்துள்ளனர். விஜய் ரசிகரின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.