இயக்குனர் பாலாவுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர்கள் ! காரணம் இதுதான்

0
6619
Bala-director

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இதுவரை 61 படங்களில் நடித்துள்ள விஜய் பெரும்பாலும் மசாலா கலந்த கமர்சியல் படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

vijay

அதீத நடிப்பினை விஜய் வெளிப்படுத்துவதில்லை… ஒரே மாதிரியாக தான் நடிக்கிறார்.. என்ற விமர்சனமும் இவர் மீது உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் வந்த மெர்சல் படத்திற்காக விஜய்க்கு விருது கிடைத்தது.

இந்த விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் பாலா.. தற்போதெல்லாம் திறமையில்லாதவர்களுக்கும் கமர்சியலாக காலத்தை ஓட்டுபவர்களுக்கும் கூட விருதுகள் கிடைக்கிறது. இது சினிமாவிற்கு நல்லதல்ல. இது வேதனை அளிக்கும் விதமாக உள்ளது, என பேசியிருந்தார் பாலா.

bala

பாலாவின் இந்த பேச்சு விஜயை தாக்கிதான் பேசப்பட்டுள்ளதாக விஜய் ரசிகர்கள் நினைத்தனர். இதனால் கடுப்பான விஜய் ரசிகர்கள் இயக்குனர் பாலாவிற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டினார். மேலும், அந்த போஸ்டரில் ‘எங்களை பகைச்சுகிட்டா இதுதான் நிலை’.. எனவும் அதில் எழுதப்பட்டிருந்தது.