பீஸ்ட்ல ஒரு மியூசிக் டைரக்டர் இருக்கார், டான்ஸ் மாஸ்டர் இருக்கார் எடிட்டர் இருக்கார், ஆனா – பீஸ்ட் படத்தில் இருக்கும் குறை குறித்து சொன்ன எஸ் ஏ சி.

0
275
Beast
- Advertisement -

மாஸ்டர் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட். நெல்சன் திலீப்குமார் இயக்கி இருக்கும் இந்த படத்தில் பூஜா ஹேக்டே, செல்வராகவன், யோகி பாபு, விடிவி கணேஷ், கிங்ஸ்லி என்று பலர் நடித்து இருந்தனர். பல எதிர்பார்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இந்த படத்திற்கு நெகடிவ் விமர்சனங்களும் குவிந்து வருகிறது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் இருக்கும் குறைகள் குறித்து இயக்குனரும் விஜய்யின் தந்தையுமான எஸ் ஏ சி பேசி இருக்கும் ஆடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Beast

இந்த படம் முழுக்க முழுக்க ஒரு விஜய் படம். இளம் இயக்குனர்கள் தங்கள் முதல் படத்தை 5 வருடம் மெருகேர்த்தி நன்றாக கொடுக்கிறார்கள். அதை பார்க்கும் போது நாமெல்லாம் என்ன இயக்குனர் என்று தான் தோன்றுகிறது. இரண்டாவது படமும் ஓரளவிற்கு பண்ணிவிடுகிறார்கள். ஆனால், மூன்றாவது படத்தில் பெரிய ஹீரோக்களை தேட ஆரம்பித்துவிடுகிறார்கள். அவர்களுக்கு பெரிய ஹீரோ கிடைத்தால் போதும்.

- Advertisement -

பெரிய ஹீரோன்னா ஓடிடும் :

அந்த பெரிய ஹீரோவிற்கு நல்ல பேன்ஸ் இருக்கிறார்கள் படம் ஓடிவிடும் என்று நம்பிவிடுகிறார்கள். அதே போல பெரிய ஹீரோக்களுக்கு படம் பண்ணும் போது அந்த ஹீரோவிற்கு ஏற்றமாதிரி தான் கதை செய்கிறார்கள். பீஸ்ட் படத்துக்கு ஏன் நெகடிவ் விமர்சனம் வருகிறது. அவ்ளோ பெரிய ஹீரோ நடித்து இருக்கிறார் அந்த படம் ஏன் சரியில்லன்னு சொல்றாங்க. ஆனாலும் கலெக்ஷன் வந்துவிடுகிறது.

மூன்றாம் நாளே சொல்ல முடியாது

இந்த படம் தோல்விபடமாக என்பதை மூன்றாம் நாளே சொல்ல முடியாது. இருப்பினும் ஒரு இயக்குனர் கதையை மாற்ற தேவை இல்லை. ஆனால், ஒரு ஹீரோவுக்கு ஏற்றார் போல படம் இருக்க வேண்டும். விஜய்க்கு டான்ஸ் தான் பலம். அதை வைத்து தான் எடுக்க வேண்டும். அதே போல ஸ்க்ரீன்பிளேவில் தான் அனைத்தும் இருக்கிறது. இப்படி ஒரு கதையை எடுக்கிறீரங்க. அதுவும் ரா ஏஜென்ட் எல்லாம் சொல்றீங்க.

-விளம்பரம்-

படத்தில் இயக்குனர் இல்லை :

அப்போது ரா ஏஜென்ட் என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். அப்போது தான் ஸ்க்ரீன் பிளே நல்லா இருக்கும். திரைக்கதை தான் ஒரு படத்திற்கு மிகவும் முக்கியம். பீஸ்ட் படம் ஓடிடும், கலெக்ஷன் பன்னிடும் அதில் மாற்றுக்கருத்து கிடையாது. இந்த படம் இசையமையாளர் இருக்கார், டான்ஸ் மாஸ்டர் இருக்கார், எடிட்டர் இருக்கார் ஆனால், டைரக்ட்டர் தான் இல்லை என்று கூறியுள்ளார் எஸ் ஏ சி.

விஜய் பேட்டி குறித்து எஸ் ஏ சி :

அதே போல விஜய் அளித்த பேட்டியில் தன்னை பற்றி பேசியது குறித்து கேட்டதர்க்கு, அதை பார்க்கும் போது எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. அது எனக்கு மட்டுமில்லை அனைத்து பெற்றோர்களுக்கும் சந்தோசம் தான் என்றும் கூறியுள்ளார். ஏற்கனவே விஜய் தன் தந்தையுடன் பல மாதங்களாக பேசாமல் இருக்கும் எஸ் ஏ சி. விஜய் படம் குறித்தே இப்படி பேசி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement