போன் செய்து வாழ்த்து சொன்ன விஜய் ! குஷி ஆன பிரபலம் ! ஏன், எதற்கு தெரியுமா..?

0
682
Actor vijay
- Advertisement -

இளைய தளபதி விஜய் எந்த அளவிற்கு சிம்பிளான ஆள் என்பது நாம் அனைவருக்கும் தெரியும்.அதே போன்று பல தருணங்களில் அவரது நல்ல குணத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்.சமீபத்தில் கூட விஜயின் சுய சரிதையை புத்தகமாக வெளியிட்ட தனது ரசிகர் ஒருவருக்கு தாமே கால் செய்து பாராட்டியிருந்தார் .அந்த ரசிகரும் அந்த தருணத்தை தனது வலைதள பக்கத்தில் ஷார் செய்து பூரிப்பு கொண்டார்.

இந்நிலையில் விஜயின் பைரவ படத்திலும் சரி, விஜய் சமீபத்தில் நடித்த மெர்சல் படத்தில் வெளியான ஆளப்போரான் தமிழன் என்ற சூப்பர் ஹிட் பாடலை எழுதிய இளம் பாடலாசிரியர் விவேக் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடியுள்ளார். மேலும் இவரது பிறந்தாலுக்கு பல்வேறு பிரபலங்கலும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இளையதளபதி விஜய் பாடலாசிரியர் விவேகிற்கு போன் செய்து தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். இதனால் சந்தோஷத்தில் மிதந்த விவேக் அந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய்க்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

Advertisement