தமிழ் சினிமாவில் தளபதி என்ற பட்டத்துடன் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் இளைய தளபதி விஜய் இறுதியாக இவரது நடிப்பில் வெளியான திகில் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக மாபெரும் சாதனைகளை படைத்து வருகிறது படத்தினை தொடர்ந்து படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 64 வது படத்தில் நடித்து வருகிறார் விதை பயிரிடப்படாத இந்த படத்தினை தளபதி 64 என்று ரசிகர்கள் அழைத்து வருகிறார்கள்
இந்த படத்தின் படப்பிடிப்புகள் டெல்லியில் நடைபெற்ற நிலையில் சமீபத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் பூந்தமல்லியில் அமைந்துள்ள பார்வையற்றோர் பள்ளியில் நிறைவடைந்தது இதைத்தொடர்ந்து தற்போது மூன்றாம் கட்ட பணிகள் கர்நாடகாவில் நடந்து வருகிறது தமிழகத்தை போலவே நடிகர் விஜய்க்கு கர்நாடகத்திலும் ரசிகர்கள் இருக்கிறார்கள் இந்த நிலையில் விஜய்யை காண படப்பிடிப்பு தளங்களிலும் வெளியே தங்கியிருக்கும் ஹோட்டல்களிலும் தினமும் ரசிகர்கள் குவிந்து வருகிறார்கள்.
இதையும் பாருங்க : நடிகை நக்மா ஜோதிகாவின் சொந்த அக்காவே கிடையாது. இவர் தான் சொந்த அக்கா.
அப்போது எடுக்கப்பட்ட சில வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த நிலையில் இந்தக் கூட்டத்தில் விஜயை கண்ட சில ரசிகர்கள் வருங்கால தமிழகமே என்று கோஷமிட்டு உள்ளனர் இதனால் சற்று பதறிப்போன விஜய் வேண்டாம் என்று தனது கைகளை அசைத்து அவ்வாறு கோஷமிட வேண்டாமென்று மறைமுகமாக கூறியிருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் அஜித்துடன் சில ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்ட போது கடவுளே அஜித்தே என்று கோஷமிட்டனர்.
இதனால் அதிருப்தி அடைந்த அஜித் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்காமல் அங்கிருந்து நடந்து சென்றுவிட்டார் தற்போது அஜித்தை தொடர்ந்து ரசிகர்கள் தேவையில்லாத கோஷமிட்டனர் விஜய்யும் தனது ரசிகர்களிடம் இதுபோல அழைக்காதீர்கள் என்று அன்பு கட்டளையை விடுத்திருக்கிறார் இனியாவது விஜய் சொன்னதை அவரது ரசிகர்கள் கேட்பார்களா என்று பார்க்கலாம்