எவ்வளவு மாதம் ஆனாலும் காத்திருக்கலாம்- மாஸ்டர் படம் குறித்து கூறியுள்ள விஜய்.

0
1155
Master
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தளபதி விஜய். கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த “பிகில்” படம் மிக பெரிய அளவில் வசூல் சாதனை செய்தது. பிகில் படத்தை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் நடித்து உள்ள படம் ‘மாஸ்டர்’. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து உள்ளார். சமீபத்தில் தான் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா ஹோட்டல் லீலா அரண்மனையில் நன்முறையில் நடைபெற்றது. இந்நிலையில் மாஸ்டர் படத்தின் விநியோகஸ்தருக்கு லலித் கைகொடுக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகிள்ளது.

-விளம்பரம்-
Lalitkumar on Twitter: "Problems? No tension baby! ? Thalapathy ...

மாஸ்டர் படத்தின் இறுதிக்கட்டப் பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதனால் தற்போது மாஸ்டர் படத்தின் பணிகள் எல்லாம் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இந்த மாஸ்டர் படத்தின் ஒட்டுமொத்த உரிமையையும் தற்போது லலித் வாங்கி உள்ளது. இறுதிக்கட்டப் பணிகள் எல்லாம் முடிவடைந்த பிறகு இந்த மாஸ்டர் படம் தீபாவளிக்கு வெளியிட உள்ளதாக படக்குழு முடிவு செய்துள்ளது.

- Advertisement -

ஏப்ரல் 9-ம் தேதி இந்த படத்தை வெளியிட முடியாததால் விநியோகஸ்தர் தரப்பில் கடும் எதிர்ப்பு வந்தது. இந்த சூழ்நிலையில் மாஸ்டர் படத்தை லலித் வாங்கி விநியோகஸ்தர்களை சமாதானம் செய்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் லலித் அவர்கள் இந்தப் படத்தின் விநியோகத்தில் நடக்கும் எல்லா விஷயங்களையும் விஜய்க்கு உடனடியாக அப்டேட் செய்துவிடுகிறார். மேலும், டிஜிட்டல் நிறுவனம் எவ்வளவு வேண்டும் ஆனாலும் மாஸ்டர் படத்தை வாங்க உள்ளது என்ற தகவல் வந்தவுடன் தளபதி விஜய் அவர்கள் என் படம் ரசிகர்கள் ரசிப்பதற்கே.

எவ்வளவு மாதம் ஆனாலும் காத்திருக்கலாம் என்று விஜய் தெரிவித்துள்ளார். விஜய்யின் கால்ஷீட் லலித்துக்குக் கிடைக்க வாய்ப்புள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள். 96 படத்தின் வெளியீட்டுக்கு லலித் உதவி செய்ததால் அவருடைய நிறுவனத்துக்கு விஜய் சேதுபதி கால்ஷீட் கொடுத்து ‘துக்ளக்’ படத்தில் நடித்து வருகிறார். அதே போல் விஜய்யும் பின்பற்றவுள்ளார் என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement