‘புலி பட விவகாரம்’ விஜய்க்கு வருமான வரித்துறை விதித்த அபராதம் – நீதிமன்றம் முக்கிய உத்தரவு.

0
368
vijaypuli
- Advertisement -

புலி படத்திற்கு நடிகர் விஜய் பெற்ற சம்பளத்தை மறைத்து இருக்கிறார் என்று வருமான வரித்துறை அபராதம் விதித்து இருந்ததற்கு சென்னை உயர்நீதிமன்றம் போட்டுள்ள உத்தரவு தற்போது சோசியல் மீடியாவில் வவைரலாகி வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டுகளாக மக்களின் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்றிருக்கிறது.

-விளம்பரம்-

அந்த வகையில் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த படம் பீஸ்ட். இந்த படத்தைத் தொடர்ந்து தற்போது விஜய் அவர்கள் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். வாரிசு படத்தை வம்சி பைடிப்பள்ளி இயக்கி வருகிறார். இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக சென்று கொண்டு இருக்கிறது. இதனை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 என்ற படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார்.

- Advertisement -

புலி படம்:

இந்த நிலையில் புலி பட வருமான வரி விவகாரம் சமீப காலமாக சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. அதாவது, விஜய் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த படம் புலி. இந்த படத்தை சிம்புதேவன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் விஜய், ஹன்சிகா, இருந்தார். சுதீப், ஸ்ரீதேவி, பிரபு, தம்பி ராமையா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இந்த நிலையில் கடந்த 2016 – 17 ஆம் ஆண்டிற்கான நிதியை வருமான வரி கணக்கை தாக்கல் செய்திருந்தார்.

வருமான வரி விவகாரம்:

அப்போது விஜய் அவர்கள் அந்த ஆண்டின் வருமானமாக 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து அந்த ஆண்டுக்கான கணக்கை வருமான வரித்துறை மேற்கொண்டது. பின் 2015ஆம் ஆண்டு நடத்திய சோதனையில் கைப்பற்ற ஆவணங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து அதன்படி புலி படத்திற்காக ஒப்பிட்டுப் பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என்றும், வருமானத்தையும் மறைத்ததாகவும் வருமானவரித்துறை கூறியிருந்தது.

-விளம்பரம்-

விஜய் அபராதம் கட்ட உத்தரவு:

இதனை அடுத்து வருமானவரித்துறை விஜய்க்கு ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் விதித்து கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதிக்குள் செலுத்த உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதனால் விஜய் அவர்கள் தனக்கு விதிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் அவர், அபராதம் விதிப்பதாக இருந்தால் 2019 ஆம் ஆண்டிலேயே விதித்து இருக்க வேண்டும். காலம் தாமதமாக பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.

நீதிபதி உத்தரவு:

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, வருமான வரித்துறைக்கு இடைக்கால உத்தரவு விதித்து உத்தரவிட்டு இருக்கிறது. மேலும், விஜய் கூறிய புகாருக்கு வருமான வரித்துறை பதிலளிக்க வேண்டும் என்றும், இந்த வழக்கை செப்டம்பர் 16-ஆம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறது என்றும் கூறி இருந்தார்கள். இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் நீதிபதியின் முன் விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிபதி, ஏற்கனவே பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவை நீட்டித்து இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இந்த விசாரணையை அக்டோபர் 26 ஆம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார்.

Advertisement