மாமன்னன் படத்தின் அந்த காட்சிய பாக்கும் போது என் வாழ்க்கையை நினைவுபடுத்துகிறது – திருமாவளவன் நெகிழ்ச்சி

0
1094
- Advertisement -

மாமன்னன் படம் என்னுடைய வாழ்க்கையை நினைவுபடுத்துகிறது என்று திருமாவளவன் அளித்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் மாமன்னன். இந்த படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து இருக்கிறார். இவர்களை தொடர்ந்து வைகை புயல் வடிவேலு , பகத் பாசில், லால் போன்ற பல முன்னணி நடிகர்களும் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருக்கிறார். மேலும், அனைவரும் எதிர்பார்த்த உதயநிதியின் மாமன்னன் படம் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. படத்தில் எல்லோரும் தனக்கு கீழ் தான் அடங்கி நடக்க வேண்டும் என்று நினைக்கும் ஆதி வர்க்கத்தினருக்கும், சமுதாயத்தில் முன்னேறி வாழ வேண்டும் என்று அனைவரையும் சமமாக பார்க்கும் பட்டியலின மக்களுக்கும், இடையே நடக்கும் போராட்டம் தான் மாமன்னன் திரைப்படம்.

- Advertisement -

மாமன்னன் படம்:

இப்படத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளத்தையும், அரசியலையும் ஆதிக்க வர்க்கத்தினர் எப்படி பயன்படுத்தி கொள்வார்கள் என்பதை இயக்குனர் சொல்லி இருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்று வருகிறது. மேலும், மாமன்னன் படம் ஜாதியைப் பற்றி பேசி இருக்குமோ? என்றெல்லாம் பலரும் விவாதித்து இருந்தார்கள். ஆனால், அதிமுகவை சேர்ந்த முன்னாள் சபாநாயகர் தனபாலின் வாழ்க்கை கதையை தான் படத்தில் காட்டி இருக்கிறார்கள் என்ற கருத்து தற்போது தொடங்கி இருக்கிறது.

படம் குறித்த விமர்சனம்:

அது மட்டும் இல்லாமல் இந்த படத்தை பார்த்து முதல்வர் மு க ஸ்டாலின், கமலஹாசன், தனுஷ் உட்பட பல பிரபலங்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். மேலும், இந்த படத்தில் வடிவேல் உடைய கதாபாத்திரம் முன்னாள் சபாநாயகர் தனபாலின் கதாபாத்திரத்தை ஒத்தி இருப்பதாக ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்திருந்தார்கள். இதற்கு மாரி செல்வராஜ் விளக்கம் கொடுத்து பேட்டி அளித்திருந்தார். இந்த நிலையில் மாமன்னன் படத்தை பார்த்து திருமாவளவன் அளித்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

திருமாவளவன் அளித்திருக்கும் பேட்டி:

பேட்டியில் அவர், இந்த படத்தில் வந்த காட்சிகள் எல்லாம் வெவ்வேறு காலகட்டங்களில் நடந்த நிகழ்வுகள் தான். அதை இயக்குனர் தொகுப்பு கொடுத்திருக்கிறார். முன்னாள் சபாநாயகர் தனபாலை நினைவூட்டும் வகையில் சில காட்சிகள் இருக்கிறது. நட்சத்திர சின்னம், தேர்தல் பின்னடைவு, அனைவரும் வெற்றி பெற்ற பின் மாமன்னனின் வெற்றி அறிவிப்பு ஆகிய இவை அனைத்துமே 2019 ஆம் ஆண்டு என்னுடைய தொகுதியான சிதம்பரத்தில் வாக்கு எண்ணிக்கையின் போது நடந்த பதற்றத்தை நினைவுபடுத்துகிறது. 2009 ஆம் ஆண்டு நான் நட்சத்திர சின்னத்தில் நின்று வெற்றி பெற்றேன்.

படம் குறித்து சொன்னது:

சமூக நீதிக்கும் ஜாதி ஆதிக்க வெற்றிக்கும் இடையிலான கரடு முரடான முரண்களை விவரிக்கும் படமாக இயக்குனர் மாறி செல்வராஜின் மாமன்னன் படம் இருக்கிறது. ஜாதி ஒரு கருத்தாக இல்லாமல் கலாச்சாரமாகவும் வலுவடைந்து தற்போது ஊரி கிடைக்கிறது. அதனை தகர்ப்பது தற்போது பெரும் போராட்டமாக இருக்கிறது. அதைக் கருத்தில் கொண்டு தான் மாமன்னன் படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் கொடுத்திருக்கிறார். கடைசியில் சமூக நீதி வெல்லும் என்பதை உறுதியாக சொல்லி இருக்கிறார். மேலும், உதயநிதி, மாரி செல்வராஜ் ஆகியோருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் பாராட்டுகள் என்று கூறியிருக்கிறார்.

Advertisement