ஆல்யா Is Back – குழந்தை பிறந்த பின் ஏறிய உடல், ரீ- என்ட்ரி கொடுக்க ஆல்யா எடுத்து வரும் கடுமையான பயிற்சி. வீடியோ இதோ.

0
242
alya
- Advertisement -

புதிய தொடரில் கமிட் ஆகி இருக்கும் ஆல்யா மானஸா தன்னுடைய உடல் எடையை குறைக்க கடுமையாக பயிற்சி செய்து வருகிறார். சின்னத்திரையில் மிகப்பிரபலமான தம்பதிகளாக திகழ்பவர்கள் சஞ்சீவ் – ஆல்யா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்கள் சஞ்சீவ் – ஆல்யா. சின்னத்திரைக்கு முன்பு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்று இருந்தார் ஆல்யா.

-விளம்பரம்-
alya

பின் ராஜா ராணி சீரியலில் செம்பா கதாபாத்திரத்தில் ஆல்யாவும், சின்னையா கதாபாத்திரத்தில் சஞ்சீவ்வும் நடித்திருந்தார்கள். இந்த சீரியலின் மூலம் இவர்கள் இருவரும் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார்கள். மேலும், இந்த சீரியலின் போதே இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பின் இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து சிறிய இடைவெளி எடுத்துக் கொண்டார் ஆல்யா.

- Advertisement -

ஆல்யா- சஞ்ஜீவ் நடிக்கும் சீரியல் :

விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா என்ற கதாபாத்திரத்தில் ஆல்யா கலக்கிக் கொண்டு வந்தார். அதேபோல் சஞ்சீவ் சன் டிவியில் சமீபத்தில் தொடங்கிய கயல் சீரியலில் நடித்து வருகிறார். பின் ஆல்யா இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்தார். ஆனால், ஆல்யாவிற்கு குழந்தை பிறக்க இருக்கும் நிலையில் சீரியலில் இருந்து விலகிவிட்டார். ஆல்யா விலகியதை அடுத்து தற்போது ஆல்யா மானஸாவிற்கு பதிலாக ரியா என்பவர் புதிய சந்தியாவாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆல்யாவுக்கு பிறந்த குழந்தை:

ஆல்யாவிற்கு ஆண் குழந்தை பிறந்து இருக்கிறார். இரண்டாவது குழந்தைக்கு பிறகு ஆல்யா உடல் எடை கூடி இருக்கிறார். சமீபத்தில் ஆல்யாவிடம் அவருடைய கணவர் சஞ்சய் ரீ-என்ட்ரி பற்றி கேட்டிருக்கிறார். அதற்கு ஆல்யா, சீரியலில் நடிக்க சென்றுவிட்டால் கட்டாயம் டயட் இருக்க வேண்டும். சரியாக சாப்பிட முடியாது. எனவே இன்னும் கொஞ்சம் நாள் நல்லா சாப்பிட்டு ஆரோக்கியமாக பின்பு உடல் எடையை குறைத்து ரீ-என்ட்ரி கொடுப்பேன் என்று கூறி இருந்தார். இந்நிலையில் ஆல்யா மீண்டும் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

-விளம்பரம்-

ரீ என்ட்ரி குறித்து சொன்ன ஆள்யா :

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு ஆல்யா பதில் அளித்தார். அப்போது ஒரு சிலர் சஞ்சீவ் இப்போது சன் டிவியில் நடிக்கிறார். நீங்கள் எந்த சேனலில் நடிக்க இருக்கிறீர்கள்? என்று கேட்டிருக்கிறார். அதற்கு ஆல்யா கூறியிருப்பது, நான் நான்கு கதை கேட்டிருக்கிறேன். அதில் இரண்டு கதை எனக்கு பிடித்து இருக்கிறது. எந்த சேனல் என்று இன்னும் கொஞ்ச நாட்களில் தெரிந்துவிடும். கண்டிப்பாக நீங்கள் சந்தோஷம் படியான சேனலில் தான் நடிப்பேன்.

கடுமையான உடற்பயிற்சி :

அதேபோல் இன்னும் இரண்டு மாதத்தில் சீரியலில் என்னை பார்க்கலாம் என்று கூறி இருந்தார். ஆனால், எந்த சேனலில் நடிக்கப்போகிறார் என்பதை ஆல்யா மானஸா சொல்லவில்லை. இப்படி ஒரு நிலையில் ஆல்யா மானஸா தன்னுடைய அடுத்த சீரியலில் நடிப்பதர்க்காக தனது உடல் எடையை குறைக்க கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அந்த வீடியோவை தன் இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள ஆல்யா ‘காம்பேக் கொடுக்க என் உடல் எடையை குறைக்க கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுல்ளேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement