தளபதியின் அன்பு பரிசு மழை.! சந்தோஷங்களை கொண்டாடும் ஆட்டோ ஓட்டுனர்கள்.!

0
260

இளைய தளபதி விஜய் பல்வேறு நல திட்ட உதவிகளை செய்து கொண்டு வருவது அனைவர்க்கும் தெரியும். நடிகர் என்பதை தாண்டி நடிகர் விஜய் பல்வேறு இயற்கை பாதிப்பின் போது தனது ரசிகர் மன்றம் மூலம் உதவிகளை செய்துள்ளார்.

கஜா புயல், தூத்துக்குடி தாக்குதல், கேரள புயல் என்று பல்வேறு தருணங்களில் நடிகர் விஜய் தனது ரசிகர்கள் மூலம் நேரடியாக உதவிகளை செய்துள்ளார். இந்த நிலையில் நடிகர் விஜய் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு பரிசுகளை வழங்கி, விருந்தளித்து அசத்தியுள்ளார்.

இதையும் படியுங்க : அஜித்துக்கு எடுத்து சொல்லுங்க.! நேரலையில் ரசிகரின் கேள்விக்கு பதில் கூறிய யாஷிகா ஆனந்த்.! 

மே தினத்தை முன்னிட்டு உழைப்பாளர்களை கவுரவிக்கும் வகையில் தளபதி அவர்கள் தன் சொந்த செலவில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு பரிசு பொருட்களும், மதிய உணவும் வழங்கியுள்ளார். இதனால் ஆட்டோ ஓட்டுனரகள் பலரும் விஜய்க்கு நன்றி தெரிவித்து விடீயோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

விஜய் ஏற்கனவே வேட்டைக்காரன் படத்தில் ஆட்டோ ஓட்டுநராக நடித்திருக்கிறார். அந்த படம் வெளியான பிறகு நடிகர் விஜய்க்கு ஆட்டோ ஓட்டுனர்கள் பலரும் ரசிகர்களாக மாறி இருந்தனர். தற்போது இந்த செயல் மூலம் பல ஆட்டோ ஓட்டுனர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார் விஜய்.