கொள்கையும் இல்லை, கட்சியும் இல்லை, வெறும் விஜய் என்ற பெயரை வைத்து இத்தனை இடங்களை கைப்பற்றியுள்ள விஜய் மக்கள் இயக்கம்.

0
1177
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முடி சூடாக மன்னனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு கோடிக்கணக்கான பேர் ரசிகர்களாக உள்ளார்கள். இதற்காக விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் ரசிகர் மன்றம் வைத்து இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இப்படி இருக்கும் நிலையில் 2020ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சேர்ந்தவர்கள் போட்டியிட்டார்கள். இது குறித்து கூட விஜய்க்கும் அவருடைய தந்தைக்கும் இடையே நிறைய கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பேச்சு வார்த்தை இல்லாமல் பிரிவில் இருந்தார்கள். மேலும், தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மொத்தம் 169 பேர் போட்டியிட்டார்கள்.

-விளம்பரம்-

அதில் 129 பேர் வெற்றி பெற்றுள்ளார்கள். இப்படி விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றது அரசியல் வட்டாரத்தில் கதிகலங்க வைத்தது. அதுமட்டுமில்லாமல் வெற்றியாளர்களை அழைத்து அவர்களுக்கு பாராட்டியும் இருந்தார் விஜய். இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து தமிழக அரசு அறிவித்து இருந்தது. வழக்கம் போல் இதில் எதிர் கட்சி அதிமுக, ஆளும் கட்சி திமுக, பாஜக, நாம் தமிழர், சுயேட்ச்சை வேட்பாளர் என பல கட்சிகள் போட்டி இட்டார்கள். அதில் விஜய் மக்கள் இயக்க கட்சியும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டது.

- Advertisement -

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்:

இதற்கு தளபதி விஜய் அவர்கள் தன்னுடைய புகைப்படம் மற்றும் மக்கள் இயக்கத்தின் கொடியை தேர்தலில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அனுமதி கொடுத்திருக்கிறார். மேலும், தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற்றது. மக்கள் அனைவரும் தங்களின் ஜனநாயக கடமையை செய்து இருந்தார்கள். இந்த நிலையில் தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணிக்கை இன்று தொடங்கியது. இதில் ஒவ்வொரு பிரிவிலும் நின்ற வேட்பாளர்களில் யார் வெற்றி பெற்றது என்று வேட்பாளர்களுடன் மக்களும் ஆர்வத்துடன் இருந்தார்கள். அதிலும் விஜய் மக்கள் கட்சி இயக்கம் எந்த தொகுதியில் வெற்றி பெற்றார் என்று ரசிகர்கள் பலரும் ஆர்வமாக இருந்தார்கள்.

விஜய் மக்கள் இயக்கம் வெற்றி பெற்ற இடங்கள்:

அந்த வகையில் பல இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் இரண்டாம் இடத்தை பிடித்து அசத்தி வருகின்றனர். புதுக்கோட்டை நகராட்சி 4வது வார்டு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட பர்வேஸ் வெற்றி பெற்றார். ராணிப்பேட்டை, வாலாஜா பேட்டை நகராட்சி 3வது வார்டில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட மோகன்ராஜ் வெற்றி பெற்றுள்ளார். குமாரபாளையம் நகராட்சியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட வேல்முருகன் வெற்றி பெற்றார். சென்னை மாநகராட்சி திமுக கோட்டையாக உள்ள நிலையில் அதிமுக பாஜக உள்ளிட்ட பிற கட்சிகளை பின்னுக்கு தள்ளிவிட்டு சென்னையில் திமுகவுக்கு போட்டியாக விஜய் மக்கள் இயக்கம் அமைந்துள்ளது.

-விளம்பரம்-

வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்:

திமுக வேட்பாளர் நிலவரசி துரைராஜ் வெற்றி பெற்ற நிலையில் 2-வது இடத்தை விஜய் மக்கள் இயக்கத்தை சார்ந்த அறிவுச் செல்வி பிடித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் ஏழு பகுதிகளில் மூன்று பகுதிகளில் விஜய் மக்கள் இயக்கம் தான் வெற்றி பெற்றுள்ளது. இப்படி பல இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் முதல் இடத்திலும், இரண்டாம் இடத்திலும் வந்து இருக்கிறது. எந்த ஒரு பிரச்சாரம் இல்லாமல், நடிகர் விஜய்யின் பிரச்சாரம் இல்லை, சரியான கொடி, சின்னம் இல்லாமல், தேர்தல் ஆணையத்துடன் அறிவுரையும் இல்லாமல் தனியாக நின்று விஜய் மக்கள் இயக்கம் வெற்றி பெற்றிருப்பது மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது என்று சொல்லலாம்.

பயனர் ஒருவரின் பதிவு:

இதனால் காலகாலமாக ஆண்டு வரும் கட்சிகள் எல்லாம் கதி கலங்கி உள்ளது. மேலும், விஜய் மக்கள் இயக்கத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் ஹாஸ்டேக்களைப் போட்டு வெற்றியை தொடங்கி விட்டார்கள். அதுமட்டுமில்லாமல் தமிழகத்தில் அதிமுக திமுகவுக்கு மாற்றாக இப்போது #விஜய் மக்கள் இயக்கம் என்று மாறி வருகிறது. அந்த அளவிற்கு அரசியலில் விஜய் மக்கள் இயக்கம் பெயர் எடுத்துள்ளது. இந்த நிலையில் ட்விட்டர் ஒருவர் கூறியது, உள்ளாட்சி தேர்தலில் இது ஒரு சுவாரசியமான அரசியல் வளர்ச்சி ஆகும். ஒரு விஷயமாக அதை உதறி விட முடியாது. அவர்கள் இன்னும் ஒரு மாற்று அல்ல. ஆனால், தேர்தல் அரசியல் ஒரு மாரத்தான்.

கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்:

அவர்கள் இங்கிருந்து எங்கு செல்வார்கள் என்பது சுவாரசியமாக இருக்கும் என்று பதிவிட்டிருக்கிறார். இதை தொடர்ந்து இன்னொரு டுவிட்டர் கூறியிருப்பது, காலம் காலமாக தமிழகத்தில் உள்ள பெரிய கட்சிகள் ஜெயிப்பது தோற்பது என்று அனைத்தையும் தாண்டி கொள்கையே இல்லாமல், கட்சியை ஆரம்பிக்காமல், விஜய் பிரச்சாரத்துக்கும் வராமல் விஜய் மக்கள் இயக்கம் இத்தனை இடத்தில் ஜெயிப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். இவரை தொடர்ந்து பலரும் விஜய் மக்கள் இயக்கம் வெற்றி பெற்றதை கொண்டாடி வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். சோசியல் மீடியாவில் விஜய் ரசிகர்கள் உடைய ஆட்டம் சும்மா தெறிக்க விட்டு வருகிறார்கள்.

Advertisement