விஜய் சொன்ன மெசேஜ், பிரமாண்ட மாநாடு, இரண்டு ஊர்களை தேர்வு செய்துள்ள விஜய் – த.வெ.க அடுத்த ப்ளான் என்ன?

0
342
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முடி சூடாக மன்னனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு கோடிக்கணக்கான பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். இதனால் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் மன்றம் வைத்து இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இப்படி இருக்கும் நிலையில் 2020 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் போட்டியிட்டார்கள். விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றது அரசியல் வட்டாரத்தில் கதிகலங்க வைத்தது.

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல் விஜய் அழைத்து அவர்களை பாராட்டியும் இருந்தார். விஜய் மக்கள் இயக்கம் அரசியலில் ஈடுபட்டாலும் தங்களின் ஜனநாயக கடமையை செய்து வருகிறது. விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக மக்களுக்கு பல உதவிகளையும் செய்து வருகிறார்கள். அதனின் முக்கிய படியாக தான் கட்சி தொண்டர்களாக மாற்றி இருக்கிறார் என்றும் கட்சி வேலைகளும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் விஜய் செய்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் விஜய் அவர்கள் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சிக்கான ஆலோசனை கூட்டத்தை நடத்தி இருந்தார்.

- Advertisement -

விஜய் அரசியல்:

இதன் மூலம் விஜய் அரசியல் வருவதற்கு அடுத்த கட்டமாக தான் இதையெல்லாம் செய்கிறார் என்று பலரும் கூறுகின்றனர். அதோடு விஜய் விரைவிலேயே அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இன்னும் சில தினங்களில் விஜய் தன்னுடைய கட்சியின் பெயரை டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய இருப்பதாக கூறப்பட்டது. மேலும், விஜய் தன்னுடைய கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என்று பெயர் வைத்திருக்கிறார். இந்த பெயரை விஜய் அறிவித்ததில் இருந்து விஜயின் மன்ற உறுப்பினர்கள், ரசிகர்கள் என பலருமே உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

கட்சி பெயரை அறிவித்த விஜய்:

இதனை அடுத்து விஜய் அவர்கள் இன்று மக்கள் இயக்கத்தின் தலைமை நிர்வாகியான புஸ்ஸி தலைமையில் மன்ற நிர்வாகிகளுடன் இணைந்து தன்னுடைய கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருக்கிறார். இந்நிலையில் இது குறித்து விஜய் மக்கள் இயக்க நிர்வாகி கூறியிருப்பது, டெல்லியில் கட்சியின் பெயரை பதிவு செய்யப் போவது சில தினங்களுக்கு முன்பே எங்களுக்கு தகவல் வந்துவிட்டது. அதிகாரப்பூர்வமாக கட்சி தொடங்குவது குறித்து விஜய் அவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளிடம் நேரடியாகவே சொல்லிவிட்டார்.

-விளம்பரம்-

விஜய் போட்ட கட்டளை:

பின் மன்றத்தினரிடம் இனிப்பு வாங்கி வைக்க சொல்லுங்கள். கட்சி பெயரை அறிவித்ததும் மக்களிடம் இனிப்பு வழங்குங்கள் தொடர்ந்து நலத்திட்ட உதவிகளையும் செய்யுங்கள் என்று விஜய் சொல்லி இருந்தார். இதனால் இன்று காலையே நாங்கள் இனிப்புகள் எல்லாம் வாங்கி வைத்து விட்டோம். அறிவிப்புக்காக எதிர்பார்த்து காத்திருந்தோம். ஆனால், 12 மணி மேல தான் அறிவிப்பு வந்தது. அதோடு எங்களுடைய தலைவர் இன்னும் அடுத்த படத்தில் கமிட்டாகவில்லை. கோட் படப்பிடிப்பில் மட்டுமே இப்போது கவனம் செலுத்தி இருக்கிறார். அதோடு 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் விஜய் போட்டியிடவில்லை.

தேர்தல் குறித்து சொன்னது:

சட்டமன்ற தேர்தலுக்காக தயாராகுவோம் என்று சொல்லியிருக்கிறார். மன்ற கட்டளைக்காக இனிப்புகளை வழங்கி வருகிறோம். விரைவிலேயே மாநாடு குறித்து அறிவிக்க இருப்பார். இப்போது மதுரையில் பிரம்மாண்ட மாநாட்டை நடத்த திட்டமிட்டு வருகின்றனர். திருச்சியையும் பரிசினையில் உள்ளது. விரைவில் மக்களை நேரடியாக விஜய் சந்திக்க இருக்கிறார் என்று கூறி இருக்கிறார்கள். மேலும், விஜய் தன்னுடைய கட்சியின் பெயரை அறிவித்ததை அடுத்து பல்வேறு கட்சி தலைவர்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் விஜயை நேரடியாக சந்தித்து பேசவும் ஆர்வம் காட்டி வருகின்றார்கள்.

Advertisement