விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களுக்கு பரிட்சியமான ஷெரீனா தனது கார் ஓட்டுனர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக கலந்துகொண்டவர் நடிகை செரினா. கேரளாவில் பிறந்த இவர் பெங்களூரில் தான் பிறந்து வளர்ந்து இருக்கிறார். மேலும், இவர் சாய்ராம் மோட்டார்ஸ் என்ற ஒரு நிறுவனத்தை பெங்களூரில் நடத்தி வருகிறார். மேலும், UVI என்ற ஸ்டூடியோ ஒன்றையும் நடத்தி வருகிறார்.
இவர் பல அழகி போட்டிகளில் கலந்துகொண்டு பட்டம் வென்று இருக்கிறார். குறிப்பாக Grazia Ford Super Model Of India World என்ற பட்டத்தை வென்று இருக்கிறார். இவ்வளவு விஷயத்தை சொன்ன அவர் தான் ஒரு நடிகை என்பதையும் சமுத்திரகனி படத்தில் நடித்ததைதையும் மேடையில் சொல்லவே இல்லை. சமுத்திரகனி மற்றும் தம்பி ராமையா நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி இருந்த ‘வினோதய சித்தம்’ படத்தில் தீபக்குக்கு மனைவியாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக் பாஸுக்கு பின்னர் இவருக்கு படங்களில் வாய்ப்பு பெரிதாக அமையவில்லை. இப்படி ஒரு நிலையில் ஷெரீனாவுக்கு வாட்ஸ் அப் மூலம் ஆபாசமாக மிரட்டல் விடுத்ததாக அவரது முன்னாள் கார் ஓட்டுநர் கார்த்திக் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.மயிலாடுதுறையைச் சேர்ந்த கார்த்திக், ரவுடி ஒருவரின் தம்பி என்று தெரிய வந்ததன் பேரில் அவரை ஓட்டுநர் பணியில் இருந்து ஷெரீனா நீக்கியதாகவும், இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக்கும் அவரது நண்பரும் ஷெரீனாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் பங்கேற்ற போது அடிக்கடி ஆங்கிலத்தில் தான் பேசி இருந்தார். பிக் பாஸில் போட்டியாளர்கள் பேசிக்கொள்ளும்போது பெரும்பாலும் தமிழில் தான் பேச வேண்டும் என்பதுதான் முக்கிய விதியாக இருந்து வருகிறது.ஆனால், இந்த நிகழ்ச்சியில் தமிழ் பேசும் போட்டியாளர்களை தவிர பிற மொழி பேசும் போட்டியாளர்களும் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இதனால் அவர்களையும் மீறி ஆங்கிலத்திலையோ அல்லது அவர்களின் தாய் மொழிகளிலேயோ பேசுவது வழக்கமான ஒரு விஷயம் தான்.
அப்படி தொடர்ந்து பேசும்போது அவர்களை பிக் பாஸ் நிச்சயம் எச்சரிப்பார். அதேபோல பிற மொழி பேசும் போது தமிழ் ரசிகர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருவார்கள்.ஆயிஷா மற்றும் ஷெரினா இருவரும் மலையாளத்தில் உரையாடிக் கொண்டிருந்தார்கள். அந்த உரையாடலில் மற்ற போட்டியாளர்கள் குறித்து அவர்கள் இருவரும் விவாதித்துக் கொண்டு இருந்தார்கள். இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போதே தமிழில் பேச வேண்டும் என்று பிக் பாஸ் எச்சரித்து இருந்தார்.
ஆனாலும், அடிக்கடி ஆயிஷா மற்றும் ஷெரினா இருவரும் மலையாளத்தில் பேசிக்கொண்டு தான் இருந்தனர். இதனை கடந்த வாரம் கமல் சுட்டி காட்டிய போது ‘இது தமிழில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி அதனால் தமிழில் தான் பேச வேண்டும்’ என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் ஷெரினா வெளியேற்றப்பட்டார். அதுவும் Elimination Cardல் அவரது பெயர் மலையாளத்தில் எழுதப்பட்டு இருந்ததை கண்டு ஷெரினா தர்ம சங்கடத்திற்கு உள்ளானர்.