நயிட்டு 11 மணிக்கு போன் பண்ணாரு, யாருன்னு கேட்டேன், போன் சுவிட்ச் ஆப் – விஜய் செய்த போன் கால் குறித்து எஸ் ஜே சூர்யா.

0
1015
sj
- Advertisement -

தனக்கு விஜய் இரவு நேரத்தில் போன் செய்ததது குறித்து இயக்குனரும் நடிகருமான எஸ் ஜே சூர்யா சுவாரசியமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் இயக்குனராக இருந்து பின்னர் ஹீரோவான பல இயக்குனர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் பிரபல இயக்குனரான எஸ் ஜே சூர்யாவும் ஒருவர். எஸ் ஜே தமிழில் பல்வேறு ஹிட் படங்களை இயக்கியும் நடித்தும் இருக்கிறார். அதிலும் இவர் இயக்கிய குஷி மற்றும் வாலி திரைப்படங்கள் வேற லெவலில் வெற்றிபெற்றது.2000 ஆம் ஆண்டு இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளிவந்த படம் தான் “குஷி”. இந்த படத்தை ஏ. எம். ரத்னம் அவர்கள் தயாரித்து உள்ளார். மேலும், இந்த படத்திற்கு இசையமைத்தவர் தேவா. இந்த படத்தில் விஜய்,ஜோதிகா,விஜயகுமார்,நிழல்கள் ரவி, மும்தாஜ்,விவேக், ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தனர்.

-விளம்பரம்-

மேலும், இந்த படம் விஜய் அவர்களின் திரை உலகில் ஒரு மைல்கல் படமாக அமைந்தது. மேலும், இந்த படம் இளம் ரசிகர்களை தான் அதிகம் கவர்ந்தது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு காதல், ரொமாண்டிக், நகைச்சுவை என கமர்சியல் படமாக இருந்தது. இப்படி ஒரு பேட்டி ஒன்றில் பங்கேற்ற எஸ் ஜே சூர்யா, விஜய் தனக்கு செய்த போன் கால் குறித்து நினைவுகூர்ந்தார். அதில் ‘‘நான் ஒரு முறை ஹைதராபாத்ல ‘ஸ்பைடர்’ படத்தின் ஷூட்டிங்ல இருந்தேன். அப்போ இரவு 11 மணி போல ஒரு போன்கால் வந்தது. ‘யாருங்க’ன்னு கேட்டேன். ‘நான் விஜய் பேசுறேன்’னார். மறுபடியும் ‘யாரு’ன்னேன். ஏன்னா, விஜய் சார் நம்பர் என்கிட்ட இருந்தது. ஆனா, புது நம்பர்ல இருந்து வந்ததனால விஜய்தான் பேசுறார்னு முதல்ல நம்பல.

- Advertisement -

அடுத்து பேசுறதுக்குள்ள என் போன் சுவிட்ச் ஆப் ஆகிருச்சு. யாரோ ராங் நம்பர்னு நினைச்சிட்டு போனை சார்ஜ் போட்டுட்டு சுவிட்ச் ஆன் பண்றேன். அப்பவும் அதே நம்பர்ல இருந்து போன் வந்தது. திரும்பவும், ‘ஹலோ, யாருங்க’ன்னு கேட்டேன். ‘ண்ணா, விஜய் ண்ணா’ன்னு சொன்னார். அப்போதான் விஜய் சார்தான் பேசுறார்னே உணர முடிஞ்சது. ‘என்ன சார், இந்த நேரத்துல கூப்பிட்டிருக்கீங்க’ன்னேன். ‘இப்போதான் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ ட்ரெய்லர் பார்த்தேன். ‘ஒரு மனுஷன் எவ்வளவுதான்யா. கஷ்டப்படுவான்’னு நீங்க பேசுற வசனம் கேட்டுட்டு வீட்டுல விழுந்து விழுந்து சிரிச்சேன்னு சொன்னாரு

kushi shooting spotக்கான பட முடிவுகள்

எனக்கு ரொம்ப சந்தோஷமாயிருந்தது. இதைச் சொல்லிட்டு ஒரு வார்த்தை சொன்னார். அது எனக்குப் பெரிய எனர்ஜியைக் கொடுத்துச்சுன்னே சொல்லலாம். ‘நடிகர் எஸ்.ஜே.சூர்யாகிட்ட விஜய் அவருக்குப் பெரிய ரசிகர்னு சொல்லிடுங்க’ன்னு சொன்னார். இதைவிடப் பெரிய பாராட்டு என்ன வேணும். மனசுல தோணுறத அப்படியே சொல்லிப் பாராட்டக் கூடியவர் விஜய் சார்.’’ என்று கூறியுள்ளார் எஸ் ஜே சூர்யா.

-விளம்பரம்-
Advertisement