ரஜினி சார் படத்தின் கதையை கேட்டதும் விஜய் அண்ணா சொன்னது இதுதான் – லோகேஷ் கனகராஜ் சொன்ன ஸ்வாரஸ்ய தகவல்.

0
190
Coolie
- Advertisement -

ஜெயிலர் என்ற சூப்பர் ஹிட் படத்தை தொடர்ந்து தற்போது ரஜினி தன்னுடைய 170 வது படத்தில் நடித்த வருகிறார். இந்த படத்தை ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் ராஜா இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு வேட்டையன் என்று பெயர் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே ரஜினியின் 171 வது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவிப்புகள் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார் மேலும் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய அறிவிப்பு டீசர் நேற்று வெளியாக இருந்தது இந்த படத்திற்கு கூலி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது இதய தலைப்பில் 1995 ஆம் ஆண்டு சரத்குமார் மற்றும் மீனா நடிப்பில் ‘கூலி’ படம் வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் டீசர் பிளாக் அண்ட் ஒயிட்டில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

தங்க கட்டிகளையும், நகைகளையும், சிலைகளையும், தங்க வாட்ச்களையும் கொள்ளையர்கள் ஒன்று சேர்த்துக் கொண்டிருக்க, அவர்களிடம் ரஜினி உள்ளே வருவதாக தகவல் சொல்லப்படுகிறது. இதையடுத்து உள்ளே வரும் ரஜினி, எதிரிகளை அடித்து துவம்சம் செய்தபடி அப்பாவும் தாத்தாவும் வ‌ந்தார்க‌ள் போனார்க‌ள் என்ற ரஜினியின் பழைய வசனம் இந்த படத்தின் டீசரில் இடம்பெற்று இருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் படங்கள் என்றாலே அதில் முந்தய படங்களின் லிங்கை வைத்து LCU என்ற கான்சப்டை கொண்டு வந்துவிட்டார். அதிலும் விக்ரம் படம் வந்ததில் இருந்தே LCU கான்சப்ட் பெரும் வைரலானது. அந்த படத்தில் தான் கைதி படத்தின் லிங்கை வைத்தார் லோகேஷ் கனகராஜ். இதனால் லியோ படத்திலும் LCU கான்சப்டை புகுத்தி இருந்தார். ஆனால், அது ஒர்க்கவுட் ஆகாவில்லை. எனவே இந்த படத்தை லோகேஷ் எப்படி எடுக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பாப்போம்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற லீகேஷ் கனகராஜ் ‘ ரஜினியின் 171வது படத்தின் கதையை விஜய்யிடம் சொன்னேன். கதையை கேட்ட விஜய், வெறும் 10 நிமிடம் சொல்லும் எந்த கதையும் எனக்கு இதுவரை பிடித்ததில்லை. இது பயங்கரமா இருக்குடா என்று கூறியிருந்தார். அது மட்டும் இல்லாமல் ஏற்கனவே லோகேஷ் சொன்ன ஒன்லைன் கதையை கேட்டு தான் ரஜினியும் இந்த படத்திற்கு ஒத்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

அதே போல சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற லோகேஷ் கனகராஜ். நான் கமல் சாரின் ரசிகனாகும் முன்பே ரஜினி சார் படங்களை காட்டித்தான் எனக்கு சாப்பாடு ஊட்டினார்கள். அண்ணாத்த படம் வரை அவரின் ஒரு படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்காமல் இருந்தது கிடையாது. என்னுடைய பார்வையில் ரஜினி சாரை ஒன்னு நினைத்துக்கொண்டு இருக்கிறேன். அதை நான் காட்டப் போகிறேன். இந்த படம் ஒரு எக்ஸ்பிரிமெண்டல் படமாக இருக்கும் என்று கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement